11ஆவது சீனச் சர்வதேச விமானப் பயணச் சேவை மற்றும் விண்வெளிப் பயணப் பொருட்காட்சி நவம்பர் முதல் நாள் சீனாவின் குவாங் துங் மாநிலத்தின் ச்சூ ஹெய் நகரில் துவங்கியது. சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த புதிய தலைமுறையைச் சேர்ந்த செங்து ஜெ-20 எனும் மறை தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானம் இப்பொருட்காட்சியில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. அதோடு, இவ்வாண்டின் ஜுலை திங்கள் சீன விமானப் படையின் யுன்-20எனும் பெரிய ரக ஏற்றியிறக்கல் விமானமும் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. சீன விமானப் பயணச் சாதனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்த போக்கை வெளிப்படுத்தும் இந்த புதிய விமானங்கள், நடப்புப் பொருட்காட்சியில் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளன.
சீன விமானப் பயணியர் சேவை தொழிற்துறைக் குழு 31-ஆம் நாள் ச்சூ ஹெய் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், செங்து ஜெ-10பி, ஜி-10கே, ஹொங்-6கே உள்ளிட்ட 160 முக்கிய தொழில் நுட்ங்களைக் கொண்ட விமானங்களும் நடப்புப் பொருட்காட்சியில் கூட்டாக காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து, சீன விமானப் பயணியர் சேவை தொழிற்துறைக் குழுவின் பொது மேலாளர் தான் ரெய் சொங் கூறுகையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் செங்து ஜெ-20 போர் விமானம் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்படுவதைத் தவிர, பறத்தல் பணியையும் மேற்கொள்ளும் என்றார்.
செங்து ஜெ--20 போர் விமானம் குறித்து, சீன விமானப் பயணியர் சேவை தொழிற்துறைக் குழுவின் துணை பொது மேலாளர் ட்சாங் சின் கொ பேசுகையில், இந்தப் போர் விமானம் சோதனைப் பயன்பாட்டுக் கட்டத்தில் நுழையவுள்ளது என்றார்.
தவிர, நடப்புப் பொருட்காட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ள யுன்-20எனும் பெரிய ரக ஏற்றியிறக்கல் விமானம், சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த 200டன் எடையுடைய பன்நோக்க பெரிய ரக ஏற்றியிறக்கல் விமானம் ஆகும். சிக்கலான வானிலை நிலைமையில், பல்வகை சரக்குகள் மற்றும் மனிதரை ஏற்றிச்செல்லும் இந்த விமானம் மூலம், தொலை தூரக் கடமையைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது.
இதனிடையில், சீன விமானப் பயணச் சேவைப் பொருட்காட்சி, சீன விமானப் பயணச் சாதனங்களின் தயாரிப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் ஜன்னலாக திகழ்கின்றது என்று சீன விமானப் பயணியர் சேவை தொழிற்துறைக் குழுவின் துணை பொது மேலாளர் ட்சாங் சின் கொ கருத்து தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், கடந்த பத்துக்கும் அதிகமான ஆண்டுகளுக்குள், சீனத் தொழிற்துறையின் தொழில் நுட்பம், மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. முன்பு, புதிய தலைமுறை விமானத்தை ஆராய்ந்து தயாரிப்பதற்கு சுமார் 18 ஆண்டுகள் தேவைப்பட்டிருந்தன. தற்போது, இந்தப் போக்கிற்கு 8முதல் 9வரையான ஆண்டுகள் மட்டும் தேவைப்படுகின்றன என்று ட்சாங் சின் கொ குறிப்பிட்டார்.