சீனத் தேசிய நிர்வாகக் கல்லூரியின் பேராசிரியர் ச்சூ லீ ஜியா இது பற்றி கூறியதாவது:
"சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி, புதிய காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. சீர்திருத்தக் கடமை மிகவும் கடினமானது. சீர்திருத்தப் போக்கில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மாறியுள்ளன. தவிர, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியின் நிலைமை மற்றும் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில், கட்சியில் அதிகார ஊழல், பணி மற்றும் வாழ்க்கை முறை பிரச்சினை உள்ளிட்ட அரசியல் வாழ்க்கை இயல்பற்ற நிலைமை தோன்றியுள்ளது. இதனை எவ்வாறு தீர்ப்பது?எதிர்காலத்தில், கட்சி ஒழுங்கு முறை, அரசியல் ஒழுங்கு முறை மற்றும் சமூக ஒழுங்கு முறையின் மேம்பாட்டுக்கு இவ்விரு ஆவணங்கள் வெளியிடப்பட்டது துணை புரியும். இதன் மூலம், சிறந்த வளர்ச்சி சூழலையும் அரசியல் சூழலையும் உருவாக்கி, ஏற்கனவேயுள்ள சீர்திருத்த இலக்குகளை நனவாக்க முடியும் என்று கருதுகின்றேன்" என்றார் அவர்.
பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழலற்ற நீதி தவறாத ஆட்சி முறை ஆய்வு மையத்தின் துணை தலைவர் ச்சுவாங் தே சுய் கூறியதாவது:
"கட்சியை கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வது எதிர்நோக்கும் சூழலும் கடமையும் முன்பை விட மாறுபட்டவை. கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், கட்சியில் தோன்றியுள்ள சில பிரச்சினைகள், முந்தைய அமைப்பு முறையில் தீர்க்கப்படுவது கடினம். புதிய பிரச்சினைகளை முழுமூச்சுடன் தீர்க்க வேண்டும் என்றும் அடுத்த காலக் கட்டத்தில் கட்சியை கண்டிப்பாக ஒழுங்கு செய்வதற்கு புதிய அமைப்பு முறை திசையை வழங்க வேண்டும் என்றும் இவ்விரு ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது" என்றார் அவர்.
இவ்விரு ஆவணங்கள் வரையப்பட்ட போக்கில், பல்வேறு தரப்புகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பரந்துபட்ட அளவில் கேட்டறியப்பட்டுள்ளன.