• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயனுள்ள ஒத்துழைப்பு
  2016-11-04 10:57:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர்கள் செயல்குழுவின் 15ஆவது கூட்டம் நவம்பர் 3-ஆம் நாள் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், இவ்வமைப்பில் பயனுள்ள ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஆறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, மண்டல வர்த்தக மற்றும் முதலீட்டின் சுதந்திர மயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் முன்னேற்றவும், உற்பத்தி திறன் சார் ஒத்துழைப்பை மண்டலப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான முக்கிய முதுகெலும்பாக உருவாக்க செய்யவும் சீனா விரும்புவதாக லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இவ்வாண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 15-ஆவது ஆண்டாகும். இதுவரை, பிரதேசத்தின் பாதுகாப்பு, நிதானம் மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்குரிய முக்கிய மண்டல அமைப்பாக இது மாறியுள்ளது. தற்போது, இவ்வமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு மூலம் மட்டுமே, கூட்டு வளர்ச்சியையும் பிரதேசத்தின் நீண்டகால அமைதியையும் நனவாக்க முடியும் என்றும் லீக்கெச்சியாங் கருத்து தெரிவித்தார்.

லீக்கெச்சியாங் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பாதுகாப்பு மற்றும் நிதானமான சூழல் தேவைப்படுகின்றது என்றார். கூட்டு, பன்நோக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொடரவல்ல பாதுகாப்புடைய கண்ணோட்டத்துக்கு இணங்க செயல்பட வேண்டும். மேலும், பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் அதிகரித்து, நிறுவனம், தொழில் நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று லீக்கெச்சியாங் ஆலோசனை தெரிவித்தார்.

தவிர, உற்பத்தித் திறன் சார்ந்த ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்துவது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். சுங்க நடைமுறை, எல்லைப்புற நோய் கிருமி தொற்று தடுப்பு உள்ளிட்ட துறைகளில், சீனா திறந்த ஒத்துழைப்பு மனதுடன் செயல்பட்டு வருகின்றது என்றும், தடையில்லா வணிக மண்டலத்தை உருவாக்கும் நடைமுறை செயல்பாட்டு முறை குறித்து, தொடர்புடைய தரப்புகளுடன் விவாதம் நடத்த சீனா விரும்புகின்றது என்றும் லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

சீனா, இதர உறுப்பு நாடுகளுடன் இணைந்து உற்பத்தி திறன் சார் ஒத்துழைப்பு மேற்கொள்வது, ஒன்றிடம் இல்லாததை ஒன்று பெற்றுக் கொள்வதாகும். இதன் மூலம், உறுப்பு நாடுகளில் மூல வள தயாரிப்பு, குறிப்பாக வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தி, உள்ளூர் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முன்னேற்ற முடியும். உள்ளூர் மூல பொருட்களைப் பயன்படுத்துவது, வேலை வாய்ப்பு பெறுவதற்கும் வாழ்வுரிமை மேம்பாட்டுக்கும் துணைபுரியும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இதனிடையில், புத்தாக்க ஒத்துழைப்பு, மக்களிடையேயான பரிமாற்றம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு பற்றியும், லீக்கெச்சியாங் ஆலோசனைகளை முன்வைத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040