ஜனநாயக ஹாங்காங் முன்னேற்ற கூட்டணியின் தலைவர் லீ ஹுய் ச்சுங் கூறியதாவது,
ஹாங்காங் சுதந்திரம் என்ற கருத்து, சீனா நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தாகும். ஆகவே, சட்ட விளக்கம் மூலம் இப்பிரச்சினையைக் கையாள வேண்டும். இப்பிரச்சனையில் மத்திய அரசு சிறிதளவும் விட்டுக்கொடுக்காது. ஒரு நாட்டில் இரு அமைப்புமுறைகள் என்பதன் அடிப்படையில் ஹாங்காங் சுதந்திரத்துக்கு இடம் இல்லை என்று அவர் கூறினார்.
ஹாங்காங் சட்டமியற்றல் அவை உறுப்பினர்களின் வாக்குறுதி அளித்தது குறித்து, ஹாங்காங் உச்ச நீதி மன்றம் விரைவில் தீர்ப்பு அளிக்கும். ஹாங்காங் நிர்வாக அவையின் உறுப்பினர் லியு சூயீ யே கூறியதாவது
இது தொடர்பாக வழக்கு தொடுப்பது முதல் இறுதி தீர்ப்பு அளிப்பது வரை சுமார் ஒன்றரை ஆண்டு தேவைப்படுகிறது. இக்காலத்தில், எப்படியான வாக்குறுதி அளிப்பது பயனுள்ளது என்பது பற்றி தற்போதைய சட்ட விதிகளில் தெளிவாக கூறப்படவில்லை. ஆகவே, சட்ட ரீதியில் தேசிய மக்கள் பேரவை சட்ட விளக்கத்தை கூடிய விரைவில் வழங்குவது இப்பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்கும் என்றார் அவர்.
சீனத் தேசிய மக்கள் பேரவை சீனாவின் சட்டமியற்றல் வாரியமாகும். சட்ட விதிகள் பற்றிய விளக்கம் அளிப்பது அதன் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.