• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் நிர்வாக பிரதேசத்தின் அடிப்படைச் சட்டம் பற்றிய சீனத் தேசிய மக்கள் பேரவையின் சட்ட விளக்கத்தின் முக்கியம்
  2016-11-08 14:32:19  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டத்தில் இடம்பெற்றுள்ள 104ஆவது விதி அதாவது ஹாங்காங் பிரதேசத்தின் அரசு அலுவலர்களின் பதவி ஏற்பு விழாவில் வாக்குறுதி அளிப்பது பற்றி சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது. சட்டப்படி வகுக்கப்பட்ட உறுதி மொழியை அத்துமீறிய செயலுக்குத் தொடர்புடையவர் உரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இந்தச் சட்ட விளக்கத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதவி ஏற்பு விழாவில், சீன மக்கள் குடியரசு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்டத்தைப் பின்பற்றி, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கு விசுவாசமாக இருப்பது என்ற வாக்கியம் சரியாகவும் முழுமையாகவும் முழு மனதுடன் வாசிக்கப்பட வேண்டும். அதனை வாசிக்க மறுக்கும் செயலும், வேண்டுமென்றே தவறாக வாசிக்கும் செயலும் ஏற்றுக்கொள்ளாததாகவும், அதனுடன் தொடர்புடைய நபர் பதவி ஏற்கும் தகுநிலையை இழந்துள்ளதாகவும் புதிய சட்ட விளக்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசியல் மற்றும் சட்டவியல் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் கழகத்தின் துணை முதல்வர் ஜியாவ் ஹுங்சாங் கூறியதாவது
அண்மையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் அவையில் பதவி பிரமாண நிகழ்ச்சியில், ஓரிரு சிலர் அடிப்படை சட்டத்தை அத்துமீறி வாக்குறுதி அளித்து, ஹாங்காங் சீனாவுக்கு உரியதல்ல என்ற முழக்க துணியை ஏந்தினர். இந்த பின்னணியில் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி தொடர்புடைய சட்ட விளக்கத்தை வெளியிட்டது என்று கூறினார்.
இந்த சட்ட விளக்கம், அரசு நிர்வாக வாரியத்தின் பணியாளர்களுக்கு அரசியல் விசுவாச அடிப்படையை இட்டுள்ளது. நாட்டின் அரசுரிமையின் முழுமையாக்கத்தையும் அடிப்படை சட்டத்தின் அதிகாரத் தன்மையையும் பேணிக்காப்பதற்கு இது துணை புரியும் என்றும் ஜியாவ் ஹுங்சாங் கருத்து தெரிவித்தார்.
அனைத்து நாடுகளிலும் பதவி பிரமாண நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமான நிகழ்வாகும். ஹாங்காங் சட்டமியற்றல் அவையின் உறுப்பினர்கள் சட்டமியற்றல் பணியில் பங்கெடுப்பர். ஆகவே ஹாங்காங் அடிப்படை சட்டத்தையும் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் கண்டிப்பான முறையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டும். நாட்டைப் பிளவுப்படுத்தும் செயலுக்கு அரசு கடுமையான தண்டனை விதிக்கும் என்று இந்தச் சட்ட விளக்கம் மூலம் மத்திய அரசு தனது மனவுறுதியை வெளிப்படுத்தியுள்ளதாக ஜியாவ் ஹுங்சாங் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040