• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்டோபர் திங்கள் சீனப் பொருளாதார வளர்ச்சி நிலைமை
  2016-11-14 18:39:16  cri எழுத்தின் அளவு:  A A A   
அக்டபோர் திங்கள் சீனாவின் தொழில் நிறுவனங்களின் லாபம், நிலையான இருப்பு முதலீடு, வீட்டு நிலச் சொத்து முதலீடு மற்றும் விற்பனைத் தொகை முதலியவை தொடர்புடைய புதிய தரவுகளை, சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் நவம்பர் 14-ஆம் நாள் வெளியிட்டது. தற்போதைய மற்றும் முழு ஆண்டின் பொருளாதார நிலைமை குறித்து, இந்த ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மெள செங் யுங், சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்வதுடன், புதிய முன்னேற்றம் பெற்றும் வருகின்றது. முழு ஆண்டில் 6.5விழுக்காடு என்ற பொருளாதார அதிகரிப்பு வேகத்தை நனவாக்குவது கடினம் இல்லை என்று குறிப்பிட்டார். சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் அக்டோபர், சீனாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான வருமானமுடைய தொழிற் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 6.1 விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு வேகம் கடந்த திங்களுக்கு சமமானது. தொழில் நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அத்துடன், சமூக நுகர்வுப் பொருட்கள் சில்லறை விற்பனைத் தொகை, 3இலட்சத்து 10ஆயிரம் கோடி யுவானாகும். தவிர, இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவில் நிலையான சொத்திற்கான முதலீட்டுத் தொகை 4இலட்சத்து 84ஆயிரம் யுவானாகும். இதில், மூன்றாவது தொழில்துறைக்கான முதலீட்டுத் தொகை, இதர தொழிதுறைகளை விட பெரிதும் அதிகரித்துள்ளது. மேலும், அரசு சாரா முதலீடு தொடர்ந்து இரு திங்களாக அதிகரித்து வருகின்றதுவது செங் யுங் பேசுகையில், சந்தை முதலீட்டுத் துறையில் உட்புற அதிகரிப்பு ஆற்றல் வலுவடைந்து வருவதை இது காட்டுகின்றது என்றார். சீனப் பொருளாதாரம் அக்டோபரில் தொடர்ந்து நிதானமான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக, உற்பத்தி, தேவை, வேலை வாய்ப்பு, தொழில் நிறுவனத்தின் லாபம் முதலிய துறைகளில் நிதான நிலைமை காணப்பட்டது. இதில், பெரிய நகரங்களில், வேலைவாய்ப்பின்மையின் விகிதம் தொடர்ந்து 5விழுக்காட்டுக்கு கீழ் நிலவியது. முதல் 9 திங்களில், நகரில் புதிய வேலை வாய்ப்பினை பெற்ற மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 6இலட்சத்து 70ஆயிரமாகும். இவ்வாண்டில் வேலை வாய்ப்பு பெறுவது பற்றிய இலக்கு முன்னதாகவே நனவாக்கப்பட்டது. வேலை வாய்ப்பு பெறும் நிலைமை நிலையாக உள்ளது தற்போது பொருளாதார வளர்ச்சியில் கவனத்துக்குரிய ஒரு முன்னேற்றமாகும் என்று மெள செங் யுங் குறிப்பிட்டார். தவிரவும், விநியோகத்துக்கும் தேவைக்கும் இடையேயான உறவு, பொருளாதாரக் கட்டமைப்பு, அதிகரிப்பு ஆற்றல், சந்தை மதிப்பீடு ஆகியவையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040