• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையிலான தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு
  2016-11-15 14:06:46  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு நடைபெறுகின்ற போது, காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையிலான தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு பற்றிய உயர்நிலை கருத்தரங்கு நவம்பர் 14ஆம் நாள் மொராக்கோவில் நடைபெற்றது. சீனா, மொராக்கோ, ஐ.நா. ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், 20க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அமைச்சர்களின் பிரதிநிதிகள், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கூடி, புதிய காலக்கட்டத்தில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மூலம் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும், தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஆலோசனைகளை அளித்துள்ளனர்.

காலநிலை மாற்ற விவகாரத்துக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதி ஷியே சென்ஹுவா அதில் துவக்க உரை நிகழ்த்துகையில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சீனாவின் ஒத்துழைப்பு திட்டங்கள், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நிதியம் ஆகியற்றில் காணப்படும் முன்னேற்றங்களில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சீனாவின் விருப்பம் வெளிக்காட்டப்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும், காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, அதிக அளவில் பங்கேற்று, ஒத்துழைப்புடன் கூட்டாக வெற்றி பெறும் உலக காலநிலை மாற்ற நிர்வாக அமைப்புமுறையை நிறுவுவது ஆகியவை பற்றியும், ஷியே சென்ஹுவா மூன்று ஆலோசனைகளை வழங்கி உள்ளார். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையை வலுப்படுத்துவது, பரஸ்பர அனுபவங்களை கற்றுக் கொண்டுப் பயன்படுத்தி, கூட்டாக வளர்வதைத் தூண்டுவது, தொடர்பு கொள்ளும் பாலத்தை அமைப்பது ஆகிய மூன்று ஆலோசனைகளை தனது உரையில் தெரிவித்தார்.

ஐ.நா. காலநிலை மாற்றக் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் செயலாளர் பட்ரிசியா எஸ்பினோசா இக்கருத்தரங்கில் உரை ஆற்றியபோது, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு வாய்ந்த முக்கியத்துவத்தை வெகுவாக பாராட்டியதோடு, அதில் சீனாவின் ஆக்கமுள்ள தலைமைப் பங்களிப்புக்கு நன்றியைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

பாரிஸ் உடன்படிக்கை விரைவாக நடைமுறைக்கு வருவது, மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்து வைப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதற்காக நாம் கூட்டாக முயற்சி எடுத்து வருகின்றோம். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்ற இத்தகைய வழிமுறை இதில் ஒரு பகுதியாகும். காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பானது, பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்கம், தொடரவல்ல வளர்ச்சி இலக்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

வளரும் நாடுகள், காலநிலை மாற்றத்தைச் சமாளித்து தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கும் முன்னேற்றப் போக்கில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கு மாபெரும் உள்ளார்ந்த வாய்ப்பு உண்டு என்று கருத்தரங்கில் பங்கேற்ற வளரும் நாடுகளின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நல்ல கூடுதல் ஆகும். தெற்கு-வடக்கு ஒத்துழைப்பு அடிப்படையாகும். வளர்ந்த நாடுகள், இப்பிரச்சினையில் வரலாற்றுக் கடமையை ஏற்க வேண்டும் என்று எகிப்து சுற்றுலா துறை அமைச்சர் ஹலித் பாஹ்மி குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040