சீன அரசுத் தலைவராக பதவியேற்ற பின், ஷிச்சின்பிங் லத்தின் அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொள்வது இது 3ஆவது முறையாகும். மிகப் பெரிய வளரும் நாடான சீனா, வளரும் நாடுகள் செறிந்துள்ள லத்தின் அமெரிக்க கண்டம் ஆகியவை, ஒரே மாதிரியான வளர்ச்சி கட்டத்தில் இருந்து, பொதுவான வளர்ச்சி கடமையை ஏற்று வருகின்றன. ஷிச்சின்பிங் பேசுகையில்,
"இயல்பான பொது உணர்வு மற்றும் கடமையுடன், நெடுநோக்கு பார்வையில் இருதரப்புறவை கருத்தில் கொண்டுள்ளோம். அரசுரிமை, வளர்ச்சி தொடர்பான உரிமை மற்றும் நலன் உள்ளிட்ட மைய நலன்கள் மற்றும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவை அளிக்க முடியும்" என்று அவர் கூறினார்.
புதிய நூற்றாண்டில், சீன-லத்தின் அமெரிக்க உறவு பெரும் வளர்ச்சி அடைந்து, பல்வேறு துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பும் முன்னேறி வருகிறது. தற்போது வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முறையை விரிவாக்கி உயர் நிலை வளர்ச்சியை நனவாக்கும் அரிதான வாய்ப்பை சீனா உள்பட பல வளரும் நாடுகள் எதிர்கொள்கின்றன. இது குறித்து ஷிச்சின்பிங் கூறியதாவது—
"சீனாவும் லத்தின் அமெரிக்காவும் வரலாற்றின் புதிய துவக்கப்புள்ளியில் நிற்கின்றன. சீன-லத்தின் அமெரிக்க பொது சமூகத்தை உருவாக்கி, இருதரப்புறவின் புதிய பயணத்துக்குத் தலைமை தாங்குவோம்" என்றார் அவர்.
லத்தின் அமெரிக்காவின் 2ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு முதலீட்டில் லத்தின் அமெரிக்கா ஆசியாவை அடுத்து 2ஆவது இடத்தில் உள்ளது. சீன சந்தையில் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. சீனப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம் மற்றும் தொழில்களின் தர உயர்வு பெரும் தேவையை உண்டாக்கும். இது பற்றி ஷிச்சின்பிங் பேசுகையில், லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விசாலமான சந்தை, அதிகமான மூலதனம், செழுமையான உற்பத்தி பொருட்கள், சிறப்பான ஒத்துழைப்பு வாய்ப்பு ஆகியவற்றை சீனா வழங்கும் என்று தெரிவித்தார்.