கடந்த ஓராண்டில் சீனப்படையில் தரைப்படைத் தலைமை வாரியம், ராகெட் படைப்பிரிவு, உத்திநோக்கு ஆதரவுப்படைப்பிரிவு ஆகிய துறைகள் நிறுவப்பட்டன. ஏழு பெரிய இராணுவப் பிரதேசங்கள் 5 பெரிய போர் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடல்படை, வான் படை, ராகெட் படை, ஆயுதக் காவல் படைப்பிரிவு ஆகியவற்றின் அலுவலகத்தின் மீதான மறுஒழுங்கமைப்புப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இராணுவ நிபுணர் சாவ் சியெளசோ கூறுகையில், இந்த பெரிய அளவிலான சீர்திருத்தம் மூலம், சீனப்படையின் கட்டமைப்பில் வரலாற்றுத்தன்மை வாய்ந்த மாற்றம் ஏற்பட்டது என்று கருத்து தெரிவித்தார்.
இந்தச் சீர்திருத்தத்தின் மூலம், சீனப்படை உண்மையான கூட்டு போரிடுதலை நனவாக்கியுள்ளது. முன்பு, தரைப்படையை முக்கியமாக கொண்டு தரையில் போரிட்டது. இப்போது, பல்வேறு படைப்பிரிவுகள் சமநிலையில் உள்ளன. கடந்த ஓராண்டில் உண்மையான போர் நிபந்தனையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய பாதுகாப்பு நலனைப் பேணிகாத்து, எதிர்காலத்தில் போரைச் சமாளிப்பதில் பெரிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அமைப்புமுறை, புதிய செயற்திறன், புதிய கடமை ஆகியவற்றால், பல்வேறு போர் பிரதேசங்களுக்கும் படைப்பிரிவுகளுக்கும் புதிய அறைகூவல்களைக் கொண்டு வந்தன. சீர்திருத்தத்தின் மூலம் படையின் கட்டுமான பயன் பெருமளவில் உயர்த்தப்பட்டு, நெடுநோக்கு நிர்வாக திறன் மேம்பட்டு, வேலை செய்யும் முறைமை முற்றிலும் மாறியுள்ளது.
தற்போது, நிர்வாகப் பயன் உயர்வு மற்றும் போர் தயார் நிலை பற்றி, பொதுவாக மேலதிகமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திட்டப்படி, 2020ஆம் ஆண்டுக்குள், தலைமை நிர்வாக அமைப்புமுறை, கூட்டு போரிடுத்தல் ஆணைய சீர்திருத்தத்தில் குறிப்பிட்ட முன்னேற்றமடைவது இந்தச் சீர்திருத்தத்தின் இலக்கு ஆகும். தகவல்மயமாக்க போரில் வெற்றி பெற்று, கடமையை பயனுள்ளதாக நிறைவேற்றிய சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீன இராணுவ சக்தி அமைப்பை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சாவ் சியெளசோ தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு தொடங்கி, 2020ஆம் ஆண்டுகளுக்குள், சீனப்படையின் சீர்திருத்தம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சீனப்படை, முந்தைய தரைப்போருக்கான இயந்திரமயமாக்க படையிலிருந்து பல்துறைகளில் ஒத்தகாலத்தில் போரிட்டு, கூட்டுப் போருக்குப் பொருந்தி, எதிர்கால போரைச் சமாளிக்கும் படையாக மாறும் என்றும் அவர் கூறினார்.