தற்போது, சீனாவில் நுகர்வின் தேவை தொடர்ந்து அதிகரித்து நுகர்வு கட்டமைப்பு மேம்பட்டு, நுகர்வு மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றுவிக்கும் பயன் தெளிவாக வலுப்படும் முக்கிய கட்டத்தில் நுழைந்துள்ளது. இந்த ஆவணத்தின் படி, உள்நாட்டு நுகர்வை மேலும் விரிவாக்குவதில் மூன்று துறைகளான கொள்கைகளும் நடவடிக்கைகளும் உள்ளன. இன்ப வாழ்வு பற்றிய துறைக்கான சேவை நுகர்வை முன்னேற்றுவித்து, சமூக மூலதனத்தின் முதலீட்டைப் பெருக்குவது, பாரம்பரிய நுகர்வின் மேம்பாட்டை முன்னேற்றுவித்து, பசுமை நுகர்வு வழக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பது, நுகர்வு சந்தைச் சூழ்நிலையை தொடர்ந்து மேம்படுத்தி, அடிப்படை வசதிக் கட்டுமானத்தை வலுப்படுத்தி, கண்காணிப்பு முறைமையைப் புதுப்பிப்பது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் வாகனம் ஓட்டுவதன் மூலம் சுற்றுலாவின் வளர்ச்சி பொருளாதாரம் புதிய தனிச்சிறப்பியல்பாக மாறியுள்ளது. இதற்காக தளங்களின் கட்டுமானம் வலுப்படுத்தப்படும்.
2016ஆம் ஆண்டு ஜுன் திங்கள் இறுதி வரை, சீனாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 71 கோடியாகும். இணையதளம் மற்றும் டிஜிடல் தொழில்நுட்பத்தின் பரவலுடன், அசைவூட்டப்பட்ட விளையாட்டு, இணைய இலக்கியம், இணைய இசை, இணைய விடியோ உள்ளிட்ட டிஜிடல் பண்பாட்டுத் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து, பொது மக்களின் பண்பாட்டு நுகர்வில் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.
தற்போது, சீனாவில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை 22 கோடியே 20 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் இது 16.1 விழுக்காடாக இடம்பெற்றுள்ளது. மக்கள்தொகையில் முதுமை விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதோடு, முதுமைக்காலக் காப்புறுதிச் சேவைக்கான நுகர்வு தேவை அதிகரித்து வருகிறது. முதுமைக்கால நுகர்வை முற்றிலும் உயர்த்துவது, முதுமைக்கால சேவை வாரியங்களை சீராக்குவது முதலிய நடவடிக்கைகள் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டன.
தரமான உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவை வினியோகம் தேவைப்படும் கொள்கைகளையும், பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கும் நிபந்தனை படிப்படியாக சீனா தயாராகி வழங்கி வருவதோடு, நடு நிலை வருமானம் பெற்ற மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதோடு, சீனாவில் பெரிய நுகர்வு அலை ஏற்பட்டு, நுகர்வு மூலம் சீனப்பொருளாதார வளர்ச்சி முன்னேறும்.