2016ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைமை அரசு வழக்கறிஞர் கூட்டம் டிசம்பர் முதல் நாள் ஹாய்னான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. ஊழலை ஒழித்து பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பது என்ற தலைப்பில், பிரிக்ஸ் நாடுகளின் தொடர்புடைய பிரதிநிதிகள் ஊழல் ஒழிப்பை வலுப்படுத்தி வருகின்ற சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். ஒத்துழைப்பு சட்டக் கட்டுகோப்பை மேலும் முழுமைப்படுத்துவது, தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, நாடு கடந்த இந்த குற்றத்தை தடுக்க வேண்டுமென இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளும் விருப்பம் தெரிவித்தனர்.
2006ஆம் ஆண்டில் சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 4 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் முதலாவது பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பிரிக்ஸ் நாடுகள் 10 ஆண்டுகள் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாக்குவதுடன், நாடு கடந்த குற்றங்களை ஒடுக்கி, புதிதாக வளரும் நாடுகளின் கூட்டு கவனத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், சீன-ரஷிய வழக்கறிஞர் நிறுவனங்களின் யோசனைப்படி, கடந்த ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைமை அரசு வழக்கறிஞர் கூட்ட அமைப்பு முறை துவங்கியது.
சீர்கேட்டை ஒடுக்கி, நேர்மை மற்றும் நியாயமான வளர்ச்சி சூழலை உருவாக்குவது பிரிக்ஸ் நாடுகளின் வழக்கறிஞர் நிறுவனங்கள் கூட்டாக எதிர்நோக்கி வருகின்ற அவசரமான கடமையாகும் என்று சீனாவின் மீயுயர் அரசு சார் மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைமை வழக்கறிஞர் சோ சியன் மிங் தெரிவித்தார். திறப்பு, பொறுமை, ஒத்துழைப்பு, வெற்றி பெறுவது ஆகிய வழிகாட்டல் கோட்பாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் தலைமை அரசு வழக்கறிஞர் கூட்டத்தில் முக்கிய பங்காற்ற வேண்டுமென தொடர்புடைய நாடுகள் விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
ஐ.நா ஊழல் ஒழிப்பு பொது ஒப்பந்தம் உள்ளிட்ட பல தரப்பு மற்றும் இரு தரப்பு உடன்படிக்கையின் சர்வதேச சட்ட கட்டுக்கோப்புக்குள் ஜி 20 உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற ஊழல் அதிகாரிகளைக் கைது செய்வது திருடப்பட்ட பொருட்களை மீட்பது என்ற உயர் நிலை கோட்பாட்டையும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை திட்டத்தையும் பிரிக்ஸ் நாடுகளின் வழக்கறிஞர் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று சோ சியன் மிங் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டில், நாடு கடந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சீனா பெற்ற சாதனைகளை ரஷிய கூட்டாட்சி தலைமை அரசு வழக்கறிஞர் மன்றத்தின் துணை தலைமை வழக்கறிஞர் மலின்னொஸ்கி வெகுவாகப் பாராட்டினார். வெளிநாடுகளில் திருடப்பட்ட பொருட்களின் மீட்கும் பணிகளை ரஷியா ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, சட்டமியற்றல் மற்றும் நீதி சட்டம் நடைமுறையை தொடர்ந்து முழுமைப்படுத்தி வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைமை அரசு வழக்கறிஞர் கூட்டம் பிரேசிலில் நடைபெறும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளும் கலந்தாய்வு மூலம் தீர்மானித்தனர்.