• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விண்வெளி அறிவியல் கடமை தொடங்கியது
  2016-12-02 19:56:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தைச் சேர்ந்த விண்வெளி அறிவியல் கடமை தற்போது முழுமையாக தொடங்கியுள்ளது என்று சீன அறிவியலகம் டிசம்பர் முதல் நாளன்று அறிவித்தது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரையான காலத்தில் விண்வெளி அறிவியல் துறையில் சீனாவின் தேவைக்குப் பொருந்தி, முழு நாட்டிலும் முன்மொழிவுகளைச் சேகரிக்கும் என்று சீன அறிவியலகம் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டின் அளவில் ஐந்து அறிவியல் செயற்கைகோள்கள் வானில் ஏவப்படும். இந்தச் செயற்கைகோள்களின் மூலம், உலக மாற்றத்தின் பின்னணியில் நீர் சுழற்சி மாற்றத்தின் தனிச்சிறப்பியல்பு, பூமியின் விண்வெளிகளிடையே இணைப்பு விதி, சூரிய காந்தப் புலத்துக்கும் வெடிப்புக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றை கண்டுபிடிப்பதில் புதிய சாதனைகளைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சீனத் தேசிய விண்வெளி அறிவியல் மையத்தின் இயக்குனர் வூ ச்சி அறிமுகப்படுத்தி கூறினார்.

சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தைச் சேர்ந்த விண்வெளி அறிவியல் கடமையை வெளியிடுவதுடன், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரையான காலத்தில் விண்வெளி அறிவியல் துறையில் சீனாவின் தேவைகள் குறித்து, சீனாவின் பல்வேறு விண்வெளி அறிவியல் துறையின் ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில் துறை வாரியங்கள் ஆகியவற்றிடம் விண்வெளி அறிவியல் கடமையைப் பற்றிய முன்மொழிவுகளைத் திரட்டும். சீன அறிவியலகம் நிறுவிய விண்வெளி அறிவியல் புத்தாக்க மேடையைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் விண்வெளியில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆயத்தப்பணியை மேற்கொள்ள வேண்டும். வூ ச்சி மேலும் கூறியதாவது: இந்த திட்டத்துக்கு சேகரிக்கப்பட்ட முன்மொழிவுகள், சீனாவின் அறிவியலாளர்கள் தற்சார்பு உருவாக்கி முன்வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த முன்மொழிவுச் சேகரிப்புப்பணி டிசம்பர் முதல் நாள் தொடங்கியுள்ளது. இது ஒரு திங்கள் காலம் தொடரும். பிற்கு தேசிய விண்வெளி அறிவியல் மையம், சேகரிக்கப்பட்ட கடமைக்கான முன்மொழிவுகளில் தலைச்சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த தலைச்சிறப்பான முன்மொழிவுகள் சீன விண்வெளி அறிவியல் ஆய்வின் நீண்டகால திட்டப்பணிக்கு அடிப்படையை இடும் என்று சீன அறிவியலகத்தின் துணைத் தலைவர் சியாங் லீபின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040