2016ஆம் ஆண்டு, சர்வதேச் சமூகத்தில் மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், உலகப் பொருளாதாரம் மந்தமாக வளர்ந்துள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஒழுங்கற்ற நிலை தீவிரமாகியது. உலகமயமாக்கத்திற்கு புறம்பான போக்கு எழுந்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, "மாற்றம்" மற்றும் "ஒழுங்கற்றது" ஆகிய இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, 2016ஆம் ஆண்டில் சர்வதேச நிலையைத் தொகுத்துக் கூறியுள்ளார். சிக்கலான மாற்றங்கள் நிறைந்திருந்த இவ்வாண்டில், சீனத் தூதாண்மைத் துறை பற்றி வாங்யீ பேசுகையில், உலக ஆட்சிமுறையின் சீர்திருத்தங்களில் தலைமை பங்கு ஆற்றுவது, அண்டை நாடுகளுடனான நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பது, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பெரிய நாட்டுறவை நிலைநிறுத்துவது, தென் சீனக் கடலின் இறையாண்மையை பேணிக்காப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்னெடுப்பது ஆகிய துறைகளில் சீனா முக்கிய முன்னேற்றம் பெற்றுள்ளது என்று கூறினார்.
2016ஆம் ஆண்டில், உலக ஆட்சிமுறையில் சீனாவின் பங்களிப்பு பற்றி கூறுகையில் ஹாங்சோவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உச்சி மாநாட்டில், சீன குறிப்பு ஆழமாக பதிவாகியுள்ளது. இதில், 29 சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல சாதனைகள் முதல்முறையாக உருவாக்கப்பட்டன. அதாவது, புதுமை செய்வதை மாநாட்டின் மைய சாதனையாக கொள்ளப்படுவது, காலநிலைப் பிரச்சினைக்கான அறிக்கையை வெளியிடுவது, பசுமை நிதி, ஜி20 அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது முதலிய சாதனைகள் முதல்முறையாக ஜி20 வரலாற்றில் முதல்முறையாக காணப்பட்டன.
இந்த உச்சி மாநாட்டை மீளாய்வு செய்து வாங்யீ கூறுகையில், உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வேர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சீன மருத்துவம் என்ற தீர்வு வழங்கப்பட்டது. அது, உலக அதிகரிப்புக்கு வலிமைமிக்க உந்து சக்தியை கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
அதேவேளை, 2016ஆம் ஆண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவை சீனா முன்வைத்து, 3 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. தற்போது வரை, 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்பதை ஆதரிக்கும் மனப்பான்மையை வெளிக்காட்டியுள்ளன. 40க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட்டுள்ளது. மேலும், 30க்கும் அதிகமானநாடுகளுடன், சர்வதேச உற்பத்தி திறன் ஒத்துழைப்பு ஒப்பந்த்த்திலும் சீனா கையொப்பமிட்டது.
தவிரவும், 2016ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸுடனான உறவு சீராகி வருகிறது. சீன-அமெரிக்க உறவு, சீன-ரஷிய உறவு நிலைப்பாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டில், சீனத் தூதாண்மைத் துறையில் பல அம்சங்களும் சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை.