• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்த வெள்ளையறிக்கை
  2016-12-06 18:12:57  cri எழுத்தின் அளவு:  A A A   
பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்த வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 6ஆம் நாள் வெளியிட்டது. பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளின் வளர்ச்சி நிகழ்வு நிலை, சர்வதேச அளவில் இத்துறை அடைந்துள்ள முன்னேற்றங்கள் ஆகியவை பற்றி இந்த அறிக்கையில் விபரமாக விவரிக்கப்பட்டுள்ளன. சீனத் தேசிய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள் நிர்வாகப் பணியகத் தலைவர் வாங் கோ ஜியாங் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள், சீனப் பொருளாதாரத்தின் புதிய அதிகரிப்புத் துறையாக மாறியுள்ளது என்றும், இது சர்வதேச சமூகத்தில் பரந்துபட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த சுகாதார வளமாக, பொதுவாகக் காணப்படும் நோய், தீராத நோய் ஆகியவற்றின் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் தனிச்சிறப்பு மிக்க பங்கினை ஆற்றியுள்ளன. அதே வேளையில், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளின் பயன்பாடு, மருத்துவ சிகிச்சைக்கான செலவையும், மருத்துவக் கட்டணத்தையும் குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் லட்சியத்தின் வளர்ச்சியில் அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக பல கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், கடந்த சில ஆண்டுகளில், பாரம்பரிய சீன மருந்துகளின் தொழில் வளர்ச்சி விரைவாக உள்ளது. பாரம்பரிய சீன மருந்துகளின் உற்பத்தி நுட்பம் பெரிதும் உயர்ந்துள்ளது. வாங் கோ ஜியாங் கூறியதாவது:  

"12ஆவது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைக்கு வரும் காலத்தில், பாரம்பரிய சீன மருந்துகள் தொழிலின் மொத்த உற்பத்தி அளவு, 20 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வரை, பாரம்பரிய சீன மருந்துகள் தொழிலின் மொத்த உற்பத்தி மதிப்பு, 78 ஆயிரத்து 660 கோடி யுவானை எட்டியுள்ளது. இது சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் தொழிலின் மொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் ஒரு பகுதியாகும்" என்றார் அவர்.

சர்வதேச மருத்துவம் மற்றும் மருந்து முறைமையில் படிப்படியாக ஒன்றிணைந்து, ரஷியா, கியூபா, வியிட்நாம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் மருந்து முறையில் பாரம்பரிய சீன மருத்துவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்த வெள்ளையறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வரை 86 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அரசுகள், சீன அரசுடன் இத்துறையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன என்று வாங் கோ ஜியாங் தெரிவித்தார்.

இந்த வெள்ளையறிக்கையின்படி, உலக பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் கழகச் சம்மேளனத்தில், 67 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 251 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவுக்கும் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருநதுகள் முக்கிய அம்சமாக மாறியுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040