• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அன்னிய முதலீடு அனுமதிக்கான கட்டுப்பாட்டை சீனா குறைப்பது
  2016-12-08 16:42:07  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்னிய வணிகர்கள் முதலீட்டுத்தொழில்துறைக்கான வழிகாட்டல் நெறிகள் பற்றிய புதிய வரைவு ஆவணத்தை, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 7-ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆவணத்தில், அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாட்டு நெறிகளின் எண்ணிக்கை, 93இலிருந்து 62ஆக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய வழிகாட்டல் நெறிகளுடன் ஒப்பிடும்போது, குறைக்கும் அளவு சுமார் 33 விழுக்காட்டை எட்டியுள்ளது. அத்துடன், அன்னிய முதலீடு அனுமதிக்கான எதிர்மறை பட்டியல் அமைப்புமுறையை உருவாக்குவதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சி இதுவும் ஆகும்.

தொடர்புடைய தரவுகளின்படி, உலகில் 70க்கும் அதிகமான நாடுகளில் அன்னிய முதலீடு அனுமதிக்கான எதிர்மறை பட்டியல் அமைப்புமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்மறை பட்டியலில், எந்தெந்த துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளில், அன்னிய முதலீடு அனுமதிக்கான எதிர்மறை பட்டியல் அமைப்புமுறை, சீனாவின் ஷாங்காய், தியன்ஜின் உள்ளிட்ட மாநகரங்களிலுள்ள தாராள வர்த்தக மண்டலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அன்னிய முதலீட்டுக்கு ஊக்கமளிக்கும் தொழில்துறை நெறிகள், அன்னிய முதலீட்டைக் கட்டுப்படுத்தும் தொழில்துறை நெறிகள், அன்னிய வணிகர் முதலீட்டுக்கு தடை விதிக்கும் தொழல்துறை நெறிகள் ஆகிய மூன்று பகுதிகள் புதிய வழிக்காட்டல் நெறிகளில் இடம்பெற்றுள்ளன. இதில், அன்னிய முதலீட்டைக் கட்டுப்படுத்தும் தொழில்துறை நெறிகளின் எண்ணிக்கை, 35ஆகும். எடுத்துக்காட்டாக, அணு மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத் துறையில் சீனா பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்க வேண்டும். வானொலி、தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பு அலுவல் தொடர்பாக, அன்னிய வணிகர்கள் ஒத்துழைப்பு மேற்கொள்வது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வழிக்காட்டல் நெறிகள், வெளிநாட்டுத் திறப்புக்கொள்கையின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க உதவி புரியும் என்று சீன நவீன சர்வதேச உறவு ஆய்வகத்தின் நிபுணர் ட்சென் ஃபெங் யீங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், சாதாரண ஆக்கத் தொழில் துறையை வெளிநாடுகளுக்கு சீனா திறந்து வைத்துள்ளது. தற்போது, ஆக்கத் தொழில் துறையின் உயர் நிலை மற்றும் தொழில் நுட்ப துறைகளின் திறப்பு தேவைப்படுகின்றன என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040