உலகமயமாக்கத்தின் எதிர்காலத்தில் சீனாவின் தலைமை பங்களிப்பு
  2016-12-09 15:49:41  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்ததன் 15வது ஆண்டு நிறைவாகும். கடந்த 15 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த அதேசமயத்தில், உலகப் பொருளாதார வளர்ச்சியையும் சீனா முன்னெடுத்துள்ளது. உலகமயமாக்கத்தின் எதிர்காலத்தில், சீனா தலைமை பங்களிப்பை ஆற்றும் என்று அமெரிக்க நிபுணர்களும் வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பிறகு 15 ஆண்டுகளில், சீன வளர்ச்சியின் சாதனை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி சர்வதேச பொருளாதாரத்துக்கான பீட்டர்சன் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உயர் நிலை ஆய்வாளர் சாட் பாவ்ன் கூறியதாவது

சீனாவின் உள்நாட்டில் பொருளாதாரம் நன்கு வளர்ந்துள்ளது. இதற்கிடையில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை சீனா எதிர்கொண்டது. சர்வதேச வர்த்தக அமைப்புமுறையும் இந்த சவாலைச் சமாளித்தது. இதில், சீனா முக்கிய பங்களிப்பை ஆற்றியது என்று தெரிவித்தார்.

அதேவேளையில், சீன பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு உந்து சக்தியாக விளங்கி வருகிறது. அது, உலக வளர்ச்சிக்கு உரிய வாய்ப்புகளை கொண்டு வரும் என்று பாவ்ன் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது

லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வணிக பொருட்களின் ஏற்றுமதியைச் சார்ந்திரும் நாடுகளுக்கு சீனப் பொருளாதார வளர்ச்சி நன்மையைத் தந்துள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்நாடுகள் சீனாவுக்கு வணிக பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன என்று தெரிவித்தார்.

தவிர, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த அளவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உலக வர்த்த்க வளர்ச்சியின் வேகம் மந்தமாக இருந்த போதிலும், பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விட அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிதிருந்தது என்று அமரிக்க-சீன வர்த்தகத்துக்கான தேசிய குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006முதல் 2014ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கு அமெரிக்காவின் சேவைத் துறையின் ஏற்றுமதி 300விழுக்காடு அதிகரித்துள்ளது. பிற நாடுகளின் அதிகரிப்பு விகிதம் 91 விழுக்காடு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனுப்பினும், 2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் தாக்கத்தால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தற்போது வரையிலும் மீட்சியடையவில்லை. இந்நாடுகளைச் சேர்ந்தோர் உலக வர்த்தகம் தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கருதுகின்றனர். இந்நிலையில், உலகமயமாக்கத்துக்கு எதிரான குரல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

அதேசமயத்தில், அமெரிக்காவில் புதிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்காவின் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை சீனா கைபற்றியதாக குற்றஞ்சாட்டியதோடு, சீனாவின் ஏற்றுமதி மீது அதிக சுங்க வரியை வசூலிக்க முயற்சி செய்வார். டிரம்பின் இத்தைய எண்ணம், உலக வர்த்தக அமைப்பின் கொள்கையை முற்றிலும் மீறுவதாகும். உலகமயமாக்கத்துக்கு எதிர்ப்பு ஒலி அதிகரித்து வரும் சூழலில், எதிர்கால வளர்ச்சியில் எப்படி தலைமை பங்களிப்பை ஆற்றுவதை சீனா ஆலோசிக்க வேண்டும் என்று சாட் பாவ்ன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய