• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வர்த்தக விதிமுறையை மீறிய செயலுக்கு சீனாவின் எதிர்ப்பு
  2016-12-12 17:23:28  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்வதற்கான உடன்படிக்கையில் 15ஆவது விதியின்படி, சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீது இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள், குறைவான விலையிலான வர்த்தக முறை விசாரணையை மேற்கொள்ளும் போது, மாற்று நாட்டின் தரவுகளைப் பயன்படுத்தி விலை நிர்ணயிப்பதற்கான காலவரம்பு 15 ஆண்டுகளாகும். இந்த வரம்பு, இவ்வாண்டின் டிசம்பர் 11ஆம் நாளுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சீனா சந்தைப் பொருளாதார தகுநிலையை இயல்பான முறையில் பெற்றுள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து, மாற்று நாடு என்ற செயல்முறையை தக்கவைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புடைய கொள்கையை மாற்றி, சீனாவின் சந்தைப் பொருளாதார தகுநிலையை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க முயன்று வருகிறது.

2016ஆம் ஆண்டு, சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததன் 15ஆவது ஆண்டாகும். சர்வதேச சமூகத்தில் சீனா சந்தைப் பொருளாதார தகுநிலையைப் பெறுவதற்கான முக்கிய ஆண்டாகும். குறைவான விலையிலான வர்த்தக முறை எதிர்ப்பில் சீனாவின் பாதகமான நிலையை மாற்ற இது துணைபுரியும். ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றம் இவ்வாண்டின் மே திங்கள் அறுதி பொரும்பான்மையுடன் சீன சந்தை பொருளாதார தகுநிலையை நிராகரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. சீனா மீதான குறைவான விலையிலான வர்த்தக முறை எதிர்ப்பு விதிமுறையை தளர்த்த காரணம் இல்லை என்று அது வலியுறுத்தியது. அதன் பின், சீனாவுக்கு சந்தை பொருளாதார தகுநிலையை இவ்வாண்டின் இறுதியில் வழங்கமாட்டோம் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.

இதற்கான காரணம் பற்றி குறைவான விலையிலான வர்த்தக முறை எதிர்ப்புத் துறையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் பேல்லிஸ் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல ஆக்கத்தொழில் சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிர்ப்பந்தத்தைத் திணித்து வருகின்றன. மாற்று நாடு என்ற விதி காலாவதியான பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறை, குறிப்பாக இரும்புருக்கு தொழில்துறைக்கு சீனாவின் ஏற்றுமதி பொருட்கள் அச்சுறுத்தலாக அமையும் என்று அவை பயப்படுகின்றன என்று தெரிவித்தார்.

நவம்பரின் தொடக்கத்தில், வர்த்தக பாதுகாப்பு சட்டத்தை திருத்தும் வரைவை ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய அவையிடம் ஐரோப்பிய ஆணையம் அதிகாரப்பூர்வமாக வழங்கியது. இது குறித்து பெல்ஜியம் VVGB சர்வதேச சட்ட அலுவல் நிலையத்தின் வழக்கறிஞர் வேர்முல்ஸ்ட் பேசுகையில், குறைவான விலையிலான வர்த்தக முறை எதிர்ப்புக்கான புதிய சுங்கவரி கணக்கீட்டு முறை, மாற்று நாடு என்ற நிலையைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை அவை மூடிமறைத்தன. அதன் இலக்கு சீனா தான் என்று குறிப்பிட்டார்.

தவிரவும், உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடான சீனா, 15 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய உடன்படிக்கையைப் பின்பற்றுமாறு இதர உறுப்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதை குற்றஞ்சாட்டக் கூடாது. மேலும், டிசம்பர் 11ஆம் நாளுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் குவிப்பு விற்பனை எதிர்ப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படாது. சட்ட வழிமுறையில் உலக வர்த்தக அமைப்பிடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சீனா வழக்கு தொடுக்க முடியும் என்று வழக்கறிஞர் பேல்லிஸ் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040