• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதாரம் பற்றிய புதிய புள்ளிவிபரங்கள்
  2016-12-13 18:21:41  cri எழுத்தின் அளவு:  A A A   
நவம்பர் திங்களுக்கான சீன தொழில்துறை நிறுவனங்களின் பயன்கள், நிலையான சொத்துகளுக்கான முதலீடு, வீட்டுமனை வளர்ச்சி, முதலீடு மற்றும் விற்பனை உள்ளிட்ட புதிய பொருளாதாரத் தரவுகளை சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் டிசம்பர் 13ஆம் நாள் வெளியிட்டது. நவம்பரில் சீனப் பொருளாதாரம் சீரான வரம்புக்குள் செயல்பட்டு, நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வந்துள்ளது என்று இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ ஷெங்யொங் தெரிவித்தார்.

நவம்பரில் சீன நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 2.3 விழுக்காடு அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்பு அளவு அக்டோபர் திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகம். குடிமக்களின் நுகர்வு விலை மிதமாக அதிகரித்து வந்த நிலையை இக்குறியீட்டின் மாற்றம் வெளிப்படுத்துகிறது. இது குறித்து மௌ ஷெங்யொங் பேசுகையில், குளிர்காலத்தில் காய்கறிகள் பயிரிடுதல் மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாகும் என்று தெரிவித்தார். சில மாதங்களில் நுகர்வு விலை குறியீட்டின் அதிகரிப்பு அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படக் கூடும். அடுத்த கட்டத்தில் குறிப்பாக அடுத்த ஆண்டில் இந்த அதிகரிப்பு அளவு தொடர்ந்து மிதமாக உயரும். ஆனால் பணவீக்கம் பெரிதும் அதிகரிக்காது என்றும் அவர் கூறினார்.

புள்ளிவிபங்களின்படி, ஜனவரி முதல் நவம்பர் வரை, நாடு முழுவதும் வீட்டுமனை வளர்ச்சிக்கான முதலீடு 9 லட்சம் கோடி யுவானுக்கு மேலாகும். கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு அதிகமாகும். ஆனால் அதிகரிப்பு வேகம் ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு குறைவு. வீட்டுமனை விலையின் விரைவான அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சீனாவின் அனைத்து முதல் நிலை நகரங்களும் 2ஆம் நிலையிலுள்ள முக்கிய நகரங்களும் அடுத்தடுத்து கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வெளியிட்டன. இது தொடர்பாக மௌ ஷெங்யொங் கூறுகையில், தற்போது இந்த கொள்கைகள் ஓரளவுக்கு பயன்களைத் தந்துள்ளதை புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

பொதுவாகப் பார்த்தால், நவம்பரில் சீனத் தேசிய பொருளாதாரத்தில் நிதானமான சீரான வளர்ச்சிப் போக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி, தேவை, முன் மதிப்பீடு உள்ளிட்ட துறைகளில் சாதகமான மாற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், தற்போதைய சர்வதேச நிலைமையில் உறுதியற்ற காரணிகள் அதிகம். உள்நாட்டில் கட்டமைப்பு சார் முரண்பாடுகள் தெளிவு. இந்நிலையில், விநியோகக் கட்டமைப்பு சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டு, மொத்த தேவையை உரிய முறையில் விரிவாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040