பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தான் வாங்கிய புதிய வீட்டில் இருந்து 100 கிலோ தங்கத்தை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக வாங்கப்பட்ட வீட்டில் உள்ள மரச்சாமான்களை விற்பதற்காக ஏல கடைக்கார்ருக்கு இவர் அழைப்பு விடுத்திருந்தார். அவரும் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். எந்த மரச்சாமானை விற்க இவர் முனைந்தாரோ, அதன் அடியில்தான் தங்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மரச்சாமானை நகர்த்த முற்பட்டபோதுதான் இப்புதையல் இருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் கழிவறை, வீட்டின் பிற பகுதிகள் என தங்கம் இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், வழக்குரைஞரை வரவழைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார். கிடைத்த புதையலின் மதிப்பு அதிகம் என்றாலும் கூட, அதற்காக அவர் செலுத்த வேண்டிய வரித்தொகையும் மிக அதிகமாம்.