• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய துவக்கப்புள்ளியில் இருக்கும் சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு
  2016-12-14 16:36:18  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு கூட்டத்தில் 2017ஆம் ஆண்டு பொருளாதாரப் பணி பற்றி ஆய்வு செய்யப்பட்ட போது, இருவழி முதலீட்டின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை பயனுள்ள முறையில் முன்னேற்றி, சட்ட ஒழுங்கை முழுமையாக்க வேண்டும். அத்துடன், முதலீட்டுச் சூழலை மேம்படுத்தி, திறப்பு துறைகளை விரிவாக்குவதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டை ஆக்கப்பூர்வமாக ஈர்க்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு புதிய துவக்கப்புள்ளியில் உள்ளது. உலக பொருளாதாரத்தில் மேலும் விரைவான வேகத்துடன் இணையும் வகையில், அடுத்த ஆண்டு, திறப்பு தன்மை வாய்ந்த புதிய பொருளாதார அமைப்பு முறையின் கட்டுமானத்தை சீனா விரைவுபடுத்தும் என்று தொடர்புடைய பிரமுகர்கள் தெரிவித்தனர்.

உலகில் புகழ்பெற்ற நாவர்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தில் அமைந்துள்ளது. ஷாங்காய் தாராள வர்த்தக மண்டலத்தில் இந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம், கடந்த ஜுனில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிறுவனத்தின் வெளியுறவுக்கான தலைமை கண்காணிப்பாளர் வாங் பேங் பேசுகையில், சீனாவின் முதலீட்டுச் சூழல் மேம்பட்டு வருவதை நேரில் உணர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சீன அதிகார வட்டாரம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 22 ஆயிரத்து 580 ஆகும். கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட இது 7.4 விழுக்காடு அதிகமாகும். அதனுடன் நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீடு, 66 ஆயிரத்து 630 கோடி யுவானை எட்டி, 4.2 விழுக்காடு அதிகரித்தது. இதன் மூலம் சீனச் சந்தை மீது பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது.

வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்யக் கூடிய தொழில்துறைக்கான வழிகாட்டல் பட்டியலின் புதிய திருத்த பதிப்பை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதில், அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்பட்டுள்ளது. எதிர்மறை பட்டியல் அமைப்பு முறையின் உருவாக்கத்துக்கு பெரும் காலடியை சீனா எடுத்து வைத்துள்ளதை இது காட்டுகிறது.

புள்ளிவிபரங்களின்படி, உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்மறை பட்டியல் எனும் நிர்வாக முறையை மேற்கொண்டு வருகின்றன. அதாவது இப்பட்டியலில் அரசினால் வகுக்கப்பட்ட துறைகளைத் தவிர்த்து, இதர துறைகளில் மட்டுமே வெளிநாடுகள் முதலீடு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக, ஷாங்காய், தியன்ஜின் உள்ளிட்ட தாராள வர்த்தக மண்டலங்களில் இந்த அமைப்பு முறை சோதனை முறையில் அமலில் இருந்து வந்தது.

வெளிநாட்டு திறப்பு கொள்கையின் மூலம் மூலவளப் பங்கீட்டை மேம்படுத்தும் திறனை உயர்த்தி, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை வழங்கும் அதேவேளை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கூட்டு வெற்றிப் பெற சீனா பாடுபடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040