• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நிதி ஒத்துழைப்பு
  2016-12-15 18:03:41  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திட்டம் நடைமுறைக்கு வந்த 3 ஆண்டுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகில் வளரும் நாடுகள் அதிகமாக உள்ளன. முதலீடு செய்வது மற்றும் நிதி திரட்டலுக்கான வழிகள் குறைவு. அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கு நிதியுதவியும் குறைவு. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளிடையே நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ரென்மின்பியின் பயன்பாட்டை விரிவாக்க வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் 14ஆம் நாள் நடைபெற்ற 3ஆவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச நிதி கருத்தரங்கில் தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஓரளவு தாழ்ந்த நிலையில் உள்ளது. இதன் விளைவாக முதலீடு மற்றும் நிதி திரட்டல் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் டி சியாங்ச்சுன் பேசுகையில்—

"பல ஆண்டுகளாக, தேசிய வளர்ச்சி வங்கி அனுபவங்களையும் மேம்பாடுகளையும் போதிய அளவில் பயன்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கு ஆதரவளித்து வருகிறது" என்று கூறினார்.

சீன மக்கள் வங்கியின் நிதி ஆய்வகத்தின் கணக்கீட்டின்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அடிப்படை வசதிகள் கட்டுமானத்துக்கு, குறைந்தது ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரையிலான நிதி தேவை. நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதில் பன்னாட்டு நிதி ஒத்துழைப்பு பெரும் பங்காற்றும். தேசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சீனாவின் பல்வகை நிதி நிறுவனங்களைத் தவிர, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும், பட்டுப்பாதை நிதியும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.

மேலும், 2009ஆம் ஆண்டு முதல் எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டில், ரென்மின்பியின் பயன்பாட்டு அளவு வேகமாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்தப் பயன்பாடு முக்கியமாக ஏற்பட்ட இடங்கள், ஹாங்காங், மக்கௌ, தைவான் மற்றும் சிங்கப்பூர் மட்டும் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ரென்மின்பி யுவானுக்கு வழங்கப்பட்ட எஸ்டிஆர் எனும் சிறப்பு நாணய அங்கீகாரம் இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் அமலுக்கு வந்த பிறகு, ரென்மின்பியின் எல்லை கடந்த பயன்பாட்டில் அதிகரிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்தனர். பார்க்லாய்ஸ் புதிய சந்தை ஆய்வகத்தின் இயக்குநர் டேவிட் பெர்னான்டெஸின் பார்வையின்படி, ரென்மின்பியின் பயன்பாட்டு அளவு விரிவாவதில் ஐயமில்லை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளில் அதன் பயன்பாட்டின் விரிவாக்கம் நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040