இவ்வாண்டின் தொடக்கத்தில், வீட்டுமனை இருப்பு தொகையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கான பொது நிதி மூலம் கடன் வாங்கும் விகிதத்தை அதிகரிப்பது, தொடர்புடைய வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் சீனாவின் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வரவேற்கப்பட்ட சில நகரங்களில் வீட்டுமனையின் விலை வேகமாக அதிகரித்தது. வீட்டுமனை விலையின் விரைவான அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகளை சில இடங்களில் உள்ளூர் அரசுகள் அண்மையில் வெளியிட்டன.
வீட்டுமனை சந்தையின் சீரான வளர்ச்சிக்கு நீண்டகாலம் பயன் தரக் கூடிய அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று சீனாவின் உயர் நிலை மீண்டும் வலியுறுத்தியதற்கு வீட்டுமனை விலையின் பெரிய ஏற்றத்தாழ்வு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இந்த அமைப்பு முறையை உருவாக்க வேண்டுமானால், வீட்டுமனையுடன் பன்முகங்களிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நடுவண் அரசு மற்றும் உள்ளூர் அரசின் நிதி மற்றும் வரி வருமானத்தின் பங்கீடு, உள்ளூர் அரசின் நில மற்றும் நிதிக் கொள்கை, வீடு மற்றும் நில சொத்துக்களுக்கான வரி முதலியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டில் வெளியான திட்டவரைவின்படி, வரும் 5 ஆண்டுகளில், வீடு மற்றும் நில சொத்துக்களுக்கான வரி சட்டமியற்றலை சீனா விரைவுபடுத்தும் அதேவேளை, வீட்டுமனை விநியோக அமைப்பு முறையையும் முழுமையாக்கி வரும். வீடு மற்றும் நில சொத்துக்களின் வரி தனியாகப் பயன் தர முடியாது. அது, நில அமைப்பு முறை முதலியவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொருளியலாளர் ஜியா காங் கருத்து தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் பார்த்தால், தற்போது முதலாவது மற்றும் 2ஆவது நிலை நகரங்களில் நில விநியோக பற்றாக்குறை, வணிக வீட்டுமனைக்கான முதலீடு சரிவு, குறைவான வருமானமுடையவர்களுக்கான குறிப்பிட்ட குடியிருப்பு விநியோகம் போதாமை உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவுகின்றன. இதனால், எதிர்காலத்தில் சீனா தொடர்ந்து விநியோகத் துறையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும் வீட்டுமனை சந்தையின் எதிர்காலம் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.