2017ஆம் ஆண்டு சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய ஆண்டாகவும் விநியோக முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் ஆண்டாகவும் ஆகும் என்று 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவைடைந்த சீனாவின் மத்திய பொருளாதாரப் பணிக்கூட்டம் உறுதி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார அமைப்புமுறையிலுள்ள முரண்பாடுகள் மற்றும் சுழற்சி முறை பிரச்சினைகளுக்கான காரணங்களைச் சீராக ஆய்வு செய்த பிறகு மத்திய அரசு இந்த முக்கியக் கடமையை உறுதி செய்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனப் பன்னாட்டுப் பரிமாற்ற மையத்தின் செயற்குழுவின் துணைத் தலைவர் சூ ச்சி சிங் கூறியதாவது
பொதுவாகக் கூறின், விநியோக முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் போது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் நிதானமான போக்கை உத்தரவாதம் செய்ய வேண்டும். தவிரவும், பல்வகை கொள்கைகளின்மூலம், நிதி, வீட்டு நிலச் சொத்து முதலிய துறைகளில் அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். சீர்திருத்தத்தின் செல்வாக்கையும் விரிவாக்க வேண்டும் என்றார் அவர்.
மத்திய நிதி மற்றும் பொருளாதாரப் பணி தலைமை அலுவலகத்தின் துணைத் தலைவர் யாங் வேமின் கருத்து தெரிவிக்கையில்,
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறைத் தேவைகளை நிறைவேற்றுவது, விநியோகத் தரத்தை உயர்த்துவது, சீர்திருத்தத்தை ஆழமாக்குவது ஆகிய மூன்று அம்சங்கள் விநியோக முறைச் சீர்திருத்தப் பணியின் முக்கிய பகுதிகளாகும் என்று கூறினார்.
புதிய ஆண்டில், தற்போதைய நிலைமைக்கு ஏற்படாத உற்பத்தி ஆற்றல் மற்றும் இருப்பு வளங்களைக் குறைக்கும் சரிப்படுத்தல் பணியை மேற்கொள்வது, வேளாண் துறையில் விநியோக முறை சீர்திருத்தத்தை மேற்கொள்வது, உற்பத்தி தொடர்பான பொருளாதாரத்தை வளர்க்க பாடுபடுவது, வீட்டு நிலச் சொத்து சந்தையின் நிதானமான சீரான வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகிய நான்கு துறை பணிகளை சீனா முக்கியமாக மேற்கொள்ளும்.
வேளாண் துறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் உணவு பாதுகாப்பு பற்றி யாங் வே மின் கூறுகையில்
வேளாண் உற்பத்தி பொருட்களின் தரம் மீதான கண்காணிப்பை அரசு தொடர்ந்து வலுப்படுத்தும். மேலும், கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு, கிராமப்புறங்களின் உயிரின வாழ்க்கை சூழலை மேம்படுத்த சீனா பாடுபடும் என்று தெரிவித்தார்.