• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா வேளாண் துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது
  2016-12-21 18:16:28  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆண்டுக்கு ஒரு முறையான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கிராமப்புற பணி கூட்டம் அண்மையில் முடிவடைந்தது. கிராமப்புறம், வேளாண் துறை, விவசாயிகள் ஆகியவை பற்றிய 2017ஆம் ஆண்டு சீன கிராமப்புற பணியின் முக்கிய கடமை வேளாண் துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதாகும் என்று இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. வேளாண் துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றி, தூய்மை உற்பத்தி வழிமுறையை நடைமுறைப்படுத்தி, அமைப்பு முறையை முழுமைப்படுத்தி புத்தாக்கி, சந்தையை பன்முகங்களிலும் தீவிரமாக்க வேண்டும் என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.

வேளாண் துறை கட்டமைப்பைச் சரிப்படுத்துவதன் முக்கியத்துவதை மத்திய அரசின் கிராமப்புற பணி கூட்டம் மீண்டும் வலியுறுத்தியது. வேளாண் துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதில், வேளாண் துறை கட்டமைப்பை சீராக சரிப்படுத்துவது மிக முக்கியம். உற்பத்தி பொருட்கள் கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு, மண்டல கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணி இதில் உள்ளது என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.

தூய்மை உற்பத்தி வழிமுறையை செயல்படுத்தி, வேளாண் துறை தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கூட்டம் சுட்டிக்காட்டியது. தூய்மை வளர்ச்சி வேளாண் துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தின் அடிப்படை கோரிக்கையாகும். தற்போது, சீனாவில் வேளாண் துறை மூல வளம் அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை கழிவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக பயன்படுத்தும் விகிதம் முறைவு விளைநிலம், நீர் வளம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடு நாளுக்கு நாள் கண்டிப்பான முறையில் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

புதிய நவீனமயமாக்க வேளாண் துறையை வளர்ப்பதில், தொழிற்துறை முறைமையை உருவாக்க வேண்டும். பல்வேறு இடங்களின் யதார்த்த நிலைமையின் படி, பெரிய தலைசிறந்த நிறுவனத்தின் நிர்மானம் மூலம், புதிய தொழில் முறைகளை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கலாம் என்று சீனச் சமூக அறிவியல் கழகத்தின் வேளாண் துறை வளர்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர் லீ குவ் சியாங் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டில், தொடர்புடைய வாரியங்கள் கொள்கை ஆதரவை வலுப்படுத்தி, ஓய்வு வேளாண் துறை, கிராமப்புறச் சுற்றுலா, வேளாண் துறை மின்னணு வணிக அலுவல் ஆகியவற்றை வளர்த்து, இணையம் பிளஸ் நவீனமயமாக்க வேளாண் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040