கரியமில வாயு அளவைக் கண்காணிக்கக் கூடிய செயற்கைக் கோள் ஒன்று 22ஆம் நாள் 3 மணி 22 நிமிடம் லாங்மார்சா 2-டி ஏவூர்தி மூலம் சீனாவின் சியூ சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
உலகளவில் கரிமத்தின் சுழற்சிப் போக்கு மற்றும் உலக காலநிலை மாற்றத்தில் அதன் தாக்கத்தை அறிந்து, ஆய்வு செய்வதற்கு இந்தச் செயற்கைக் கோள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிகிறது.