• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத்த்தை ஒடுக்குவதில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முயற்சி
  2016-12-22 14:32:00  cri எழுத்தின் அளவு:  A A A   

பயங்கரவாதம் மற்றும் கூட்டு சேர்ந்து புரியும் குற்றங்களுக்கு நிதி திரட்ட்டுவதைத் தடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் 21ஆம் நாள் சட்டத்துறைக்கான ஒரு தொகுதி முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

தற்போது ஐரோப்பிய மக்கள் ஓராண்டில் மிக முக்கியமான விழாவான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். இந்நிலையில், ஜெர்மனியின் பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் சம்மீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத்த் தாக்குதல் மக்களின் மகிழ்ச்சியை இழக்க செய்தது. மேலும் இவ்வாண்டில் பெல்ஜியமும் பிரான்ஸும் கடும் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாயிற்று. இந்நிலையில், ஐரோப்பாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணி மேலும் கடினமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பாதுகாப்புக்காக எல்லை மேலாண்மை வாரியத்தின் செயல் திறனை உயர்த்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் பல சட்ட விதிகளைத் திருத்தியுள்ளது. பயங்கரவாதம், கூட்டு சேர்ந்து புரியும் குற்றங்கள், கணினி குற்றம் முதலியவற்றை ஒடுக்குவதில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன.

ஆனால், நிதி துறையில் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகளின் பற்றாக்குறையினால், பயங்கரவாத நடவடிக்கைக்கான நிதி புழக்க சங்கிலியை உரிய நேரத்தில் நிறுத்த முடியவில்லை. இத்தகைய நிலைமை மாற்றப்படும். புதிய விதிகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்ட வங்கி கணக்குகள் 48 மணி நேரத்துக்குள் முடக்கப்படும் என்று 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் சட்டத் துறையில் பெறும் மாபெரும் முன்னேற்றம் இதுவாகும் என்று சட்டம், நுகர்வோர் மற்றும் பாலின சமத்துவ விவகாரப் பொறுப்பாளர் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய உறுப்பினர் வில்லா யுலோவா தெரிவித்தார். பயங்கரவாதிகளின் நிதி புழக்கத்தின் மீது சுங்கத் துறையின் கண்காணிப்பு ஆற்றலை விரிவாக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.

தற்போதைய விதியின்படி, வெளிநாட்டவர் ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் போது அல்லது திரும்பும் போது 10 ஆயிரம் யுரோவைக் கொண்டு சென்றால் சுங்க துறையிடம் பதிவு செய்ய வேண்டும். இனிமேல், அஞ்சல் அல்லது சரக்கு வழியிலும் இத்தகைய விதி நடைமுறைக்கு வரும். மேலும் தங்கம், முன் கட்டண வங்கி அட்டை உள்ளிட்டவை கண்காணிப்பில் சேர்க்கப்படும்.

தவிரவும், சேகன் நாடுகளுக்கு செல்வதற்கான தகவல் பதிவு செய்யும் அமைப்புமுறையையும் ஐரோப்பா வலுப்படுத்தும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040