• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளில் வளர்ச்சி பற்றி சீன வணிகர்களின் கருத்து
  2016-12-23 20:00:30  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனச் சர்வதேச வணிக சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் டிசம்பர் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தொழில் நிறுவனங்களின் சர்வதேச தலைமை திறன் உருவாக்கம் என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். வீட்டு நிலச்சொத்து, நெசவு, சாதனத்தயாரிப்பு, உயர் அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் புகழ்பெற்ற வணிகர்கள் ஒன்று கூடி, வெளிநாட்டில் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

வான்கோ குழுமத்தின் இயக்குனர் குழுத் தலைவர் வாங்ச்சீ கூட்டத்தில் பேசுகையில், வான்கோ குழுமத்தின் சர்வதேசமயமாக்க முன்னேற்றப் போக்கு சீராக உள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள், உற்பத்தி பொருட்களின் போட்டியாற்றல் மற்றும் நம்பிக்கை என்று குறிப்பிட்டார்.

சுங்சிங் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் லியுசியன், வாங்ச்சீயின் கருத்தினை ஆமோதித்தார். மைய போட்டியாற்றலை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. வெளிநாடுகளில் போட்டியிடும் தொழில் நிறுவனங்கள் தொழிலின் முன்னணியில் நின்று, சர்வதேச தலைமை ஆற்றலைக் கொள்வதற்கு தொடர்ச்சியான புதுப்பிக்க திறன் தேவைப்படும் என்று சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:

மைய போட்டியாற்றலை உருவாக்குவதில், தமது உற்பத்திப்பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது மிக முக்கியம். சர்வதேசமயமாக்க முன்னேறிய தொழில் நிறுவனமாக கொண்டு, சொந்த மேம்பாட்டையும் கொள்ள வேண்டும். தொடர்ச்சியான புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை, சர்வதேசமயமாக்க வளர்ச்சி போக்கில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணமாகும் என்று லீயு சியன் கூறினார்.

சீனத் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வணிகத்தை வளர்ப்பதுடன், சீனாவின் தொழில் மற்றும் வணிக துறை பார்வையாளரிடமிருந்து பங்கெடுப்பவராக மாறியுள்ளது. எதிர்காலத்தில் மென்மேலும் முக்கியமான பங்கினை ஆற்றும். சீனத்தொழில் நிறுவனங்கள் சர்வதேச தலைமைத் திறனை உருவாக்குவதோடு, உலக பொருளாதாரக் கட்டுப்பாட்டில் பங்கெடுக்கும் ஆற்றலை முற்றிலும் உயர்த்த வேண்டும். சீனச் சர்வதேச வணிக சங்கம் இதற்கு முழு மூச்சுடன் ஆதரவு அளிக்கும் என்று இச்சங்கத்தின் தலைவர் சியாங் சங்வெய்யின் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இவ்வாண்டு பி-20 உச்சிமாநாட்டுக்கான ஆயத்தப்பணியில் அலிப்பாபா, லெனொவோ, பெய்டு உள்ளிட்ட சர்வதேச குழுமங்கள் விவாதத்தில் கலந்துகொண்டுள்ளன. பெலுவில் நடத்திய ஏபெக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் தொழில் மற்றும் வணிகத் துறையின் ஆயிரம் பிரதிநிதிகளில் சீனர் நான்கில் ஒரு பகுதியாக இருந்தனர். தற்போது சீனாவின் செல்வாக்கு மிகப் பெரியது. விரைவில், சீனச் சர்வதேச வணிக சங்கம் உறுப்பு நிறுவனங்களை அமைத்து, பலதரப்பு மேடையைப் பயன்படுத்தி தங்களது நிலைப்பாட்டையும் கோரிக்கையும் முன்வைக்க வேண்டும் என்றார் சியாங் சங்வெய்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040