• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவுசார் சொத்துரிமை நிலைமை
  2016-12-26 18:14:16  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அண்மையில் ஜெனிவாவில் 2016ஆம் ஆண்டு உலக அறிவுசார் சொத்துரிமை குறியீடு என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி 2015ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 29 இலட்சம் தனிக்காப்புரிமை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சீனா வழங்கிய விண்ணப்பங்கள் மிக அதிகமானது. சமூகத்தில் அறிவுசார் சொத்துரிமை மீதான உணர்வு தொடர்ந்து வலுப்படுவதுடன் சீனப்பொருளாதாரத்தின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியில் புதிய உயிராற்றல் மேம்படுத்தப்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

அண்மையில் குவாங்சோவின் உயர் தொழில் நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள ஜிங்சின் தொலைத்தொடர்பு அமைப்பு முறை நிறுவனம் துருக்கியின் 4ஜி நிலையத்துக்கான திட்டப்பணியைப் பெற்றுள்ளது. இத்திட்டப்பணியின் தொகை 10 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. ஜிங்சின் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் பு பின்லுங் அறிமுகப்படுத்திக் கூறுகையில், பல்வேறு எதிராளிகளைத் தோற்கடித்து வெற்றி பெறுவதற்கான காரணம், தமது நிறுவனம் கம்பியில்லா சேவை துறையில் மிக அதிகமான தனிக்காப்புரிமைகளைப் பெறுவது தான் என்று குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் குவாங்சோவின் உயர் தொழில் நுட்ப மண்டலத்தில் அறிவுசார் சொத்துரிமை வர்த்தக மையம், சொத்துரிமை வர்த்தக நிலையம், சீனாவில் முதலாவது அறிவுசார் சொத்துரிமைக்கான இணைய நாணய மேடை ஆகிய சேவை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மேலும் செவ்வனே தொழில் புரிவதற்கு அவை துணைபுரிந்து வருகின்றன. தற்போது, அறிவுசார் சொத்துரிமையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு, இம்மண்டலத்திலுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியில் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது.

தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகத்தின் தலைவர் சென் சாங்யூ பேசுகையில், தற்போது, சீனா, புதுப்பிக்கப்படுவதன் மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவித்து, பொருளாதார வளர்ச்சி முறையை மாற்றி தீவிரமாக தரத்தை உயர்த்தும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று கருத்து தெரிவித்தார். இணையம், மின்னணு வணிகம், பெரிய தரவுகள் உள்ளிட்ட புதிய துறைகளிலான அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பில் கவனம் செலுத்தி, உணவு, மருந்து, சுற்றுச்சூழல் முதலிய மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய துறைகளில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பிரச்சினைகளையும் செவ்வனே செய்து, பொது மக்களின் சட்டப்பூர்வ நலன்களை பயனுள்ளதாக பேணிகாக்க வேண்டும் என்றும் முக்கியமாக சென் சாங்யூ கூறினார்.

மேலும் மின்னணு வணிகத்தின் வளர்ச்சியோடு, சீனாவில் தனிக்காப்புரிமைகான மீறல் வழக்குகளில் புதிய தனிச்சிறப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வழக்கு விசாரிப்பு முறைமையை மேம்படுத்தி, புத்தாக்கம் செய்தவர்களின் சட்டப்பூர்வ நலன்களை பேணிகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040