தற்போது, வெளியூரில் பயணம் மேற்கொள்வது என்பது, ஓய்வு நேரத்தில் சீன மக்களின் முதன்மை தெரிவாக மாறியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2020ஆம் ஆண்டு சீனாவின் சுற்றுலா சந்தையில் பயணிகளின் மொத்த எண்ணிக்கை, 670 கோடியை எட்டும். சுற்றுலா துறைக்கான மொத்த முதலீட்டுத் தொகை, 2 லட்சம் கோடி யுவானை எட்டும். சுற்றுலாத் துறையின் மொத்த வருமானம், 7 லட்சம் கோடி யுவானை எட்டும்.
சீனா, 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சுற்றுலா துறையைச் செவ்வனே வளர்க்கும் பொருட்டு, எதிர்காலத்தில் நாட்டில் பத்து தலைசிறந்த சுற்றுலா மண்டலங்களை முக்கியமாக கட்டியமைக்கும் என்றும், பட்டுப்பாதை சுற்றுலா மண்டலம், யாங் சீ ஆற்றின் சர்வதேச தங்க சுற்றுலா மண்டலம், மஞ்சள் நாகரீக சுற்றுலா மண்டலம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் அடிப்படையில், தென் சீனக் கடல் பண்பாட்டு சுற்றுலா மண்டலத்தை வளர்க்கும். ஹாய் கோ, சான் யா, சான் ஷா ஆகிய இடங்களை மையமாக கொண்டு, தென் சீனக் கடல் சுற்றுலா வளர்ச்சியைத் தூண்டும் வகையில், உலகப் புகழ் பெற்ற சர்வதேச கடல் விடுமுறை சுற்றுலா இலக்கிடம் கட்டியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, சீனாவில் சொந்த வாகனங்களின் மூலம் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், 2020ஆம் ஆண்டு, சீனாவில் சொந்த வாகனங்களில் பயணிப்போருக்கான 2000 சாலையோர சீருந்து முகாம்கள் நிறுவப்படும் என்று இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.