• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வறுமை ஒழிப்பு வளர்ச்சி பற்றிய அறிக்கை
  2016-12-28 17:13:20  cri எழுத்தின் அளவு:  A A A   
27ஆம் நாள், சீன சமூக அறிவியலகமும் சீன அரசவையின் வறுமை ஒழிப்பு பணியகமும் கூட்டாக சீனாவின் வறுமை ஒழிப்பு வளர்ச்சி-2016 என்னும் நீல அறிக்கையை வெளியிட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் வறிய மக்களின் எண்ணிக்கை 79 கோடியாக குறைந்துள்ளது. உலகில் வறிய மக்கள் குறைப்பில் இது 70 விழுக்காடாகும். அடுத்து, சீனா, குறிப்பிட்ட துறையின் வறுமை ஒழிப்பிலும் வறுமையிலிருந்து விடுபடுவதிலும் கவனம் செலுத்தி, 2020ஆம் ஆண்டுக்குள் தற்போதைய வரையறைக்குக் கீழ் மிகவும் ஏழ்மையான மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபதற்கு உதவியளிக்கும்.

இந்த நீல அறிக்கையில் வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவங்கள், எதிர்நோக்கியுள்ள நிலைமை, அறைகூவல் மற்றும் கொள்கைகள் விளக்கிக்கூறப்பட்டுள்ளன. சீனாவின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப்போக்கு பன்முகங்களிலும் ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சீன சமூக அறிவியலகத்தின் துணை இயக்குநர் லீ பெய்லின் அறிமுகப்படுத்தி கூறியதாவது:

ஒலி1

இந்த நீல அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளன. வளர்ச்சி அனுபவம், தற்போதைய புதிய நிலைமை பிரச்சினை மற்றும் அறைகூவல், அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் கொள்கைகள் ஆகியவை இதில் இடம்பெற்றன என்றார் அவர்.

13ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், சீனாவின் வறுமை ஒழிப்பு நிலைமை கடினமாக உள்ளது. சுமை அதிகம், ஒட்டுமொத்த பொருளாதார சரிப்படுத்தல், வானிலை மாற்றம், இயற்கைச் சீற்றம், சந்தை ஏற்றத்தாழ்வு முதலிய அறைகூவல்களை எதிர்நோக்கும். ஆனால், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை மேற்கொண்ட 30 ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள நாட்டின் நிதி ஆற்றல், அமைப்பு முறை மேம்பாடு, விநியோக முறைச் சீர்திருத்தம், வளர்ச்சி முறைமை மாற்றம் ஆகியவை வழங்கிய புதிய வாய்ப்புகளும், அதிகமான வறுமை ஒழிப்புத் திட்டங்களும், அணி திரட்டல் மற்றும் நிர்வாக அனுபவங்களும் வறுமை ஒழிப்புக்கு சீரான அடிப்படை இட்டுள்ளன.

அரசாங்கம், சந்தை மற்றும் சமூகம் ஆகிய மூன்று ஆற்றல்களை ஒன்றுக்கூடி சீனா வறுமை ஒழிப்பு வழிமுறையையும் அமைப்புமுறையையும் புதுமையாக்கி, பன்முகங்களிலும் தொடரவல்ல வறுமை ஒழிப்புப் பணியை நிறைவேற்றி வருகிறது என்று இந்நீல அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீ பெய்லின் மேலும் கூறியதாவது:

சீனாவின் வறுமை ஒழிப்பு லட்சியம் மிகப் பெரியது. பல்வேறு புதிய பிரச்சினைகளும் அறைகூவல்களும் இடைவிடாமல் ஏற்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்பின் எண்ணிக்கையிலும் தரத்திலும் கவனம் செலுத்தியது மட்டுமல்ல, நீண்டகாலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040