சீனப் போக்குவரத்து வளர்ச்சி எனும் வெள்ளையறிக்கை
2016-12-29 18:02:59 cri எழுத்தின் அளவு: A A A
சீனப் போக்குவரத்து வளர்ச்சி எனும் வெள்ளையறிக்கையைச் சீன அரசவையின் செய்தி அலுவலகம் 29ஆம் நாள் வெளியிட்டது.
இந்த வெள்ளையறிக்கையில், சீனப் போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாறு, ஒட்டுமொத்த போக்குவரத்து தொகுதியின் கட்டுமானம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பல ஆண்டுகால வளர்ச்சி மூலம், பன்நோக்க போக்குவரத்து தொடரமைப்பு சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, பற்றி சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி யாங் சுவென் தாங் கூறியதாவது:
2015ஆம் ஆண்டு இறுதி வரை, பல்வேறு நிலை தொடர்வண்டி தொடரமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இயங்கும் மொத்த தொடர்வண்டி தண்டவாள நீளம் ஒரு இலட்சத்து 21ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது, உலகில் இரண்டாவது இடம் வகிக்கின்றது. இதில், அதிவிரைவு தொடர்வண்டி தண்டவாள நீளம் 19ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது உலகில் முதலாவது இடம் வகிக்கிறது. இதனால், அதிவிரைவு தொடர்வண்டி, சீனத் தயாரிப்பையும் சீனப் புத்தாக்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மேம்பாடுடைய துறையாக மாறியுள்ளது. தவிர, சீனாவில் நெடுஞ்சாலை தொடரமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் உயர் வேக நெடுஞ்சாலையின் மொத்த நீளம் ஒரு இலட்சத்து 24ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது. இது, உலகில் முதலாவது இடத்தில் உள்ளது என்றார்.
சீனப் போக்குவரத்து அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் மற்றும் பயன்பாட்டுத் துறையில், முக்கிய சாதனைகள் பெறப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் கட்டுமான தொழில் நுட்பம், உலகின் முன்னணியில் இருக்கிறது. மேலும், அதிவிரைவு தொடர்வண்டி, பனிப் பிரதேசங்களிலுள்ள தொடர்வண்டி, மீடபூமி பகுதியிலான தொடர்வண்டி, அதிக எடையுடைய பொருட்களை ஏற்றிச்செல்லும் தொடர்வண்டி ஆகிய சிக்கலான தொடர்வண்டிகளைக் கட்டியமைக்கும் தொழில் நுட்பத்தில் சீனா உலகளவில் முன்னணியில் இருக்கின்றது.
தவிரவும், உள்நாட்டில் போக்குவரத்து கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் அதே வேளையில், சீனா போக்குவரத்து துறையில் வெளிநாட்டுத் திறப்பு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, சீன அரசு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து, போக்குவரத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று தொடர்பு மற்றும் திறப்பு ஆகியவை குறித்து ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றது என்று யாங் சுவென் தாங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய