சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் அண்மையில், அரசவையின் வழமையான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வெளிநாட்டு மூலதனத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதை விரைவுப்டுத்தும் நடவடிக்கை பற்றிய அறிக்கை ஒன்று இக்கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தைச் சீனா சமத்துவ முறையில் கையாளும். வெளிநாட்டு மூலதனத்திற்கு நியாயமான போட்டிச் சூழலை சீனா உருவாக்கும் வகையில், புதிய சுற்று வெளிநாட்டுத் திறப்பு பணியை சீனா விரைவுப்படுத்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் நிங் ஜி ஷெ, 30ஆம் நாள், சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் கொள்கை விபரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்கள்காலத்தில், சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 355 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.0 விழுக்காடு அதிகம். யதார்த்த ரீதியில் வெளிநாட்டு மூலதனத்தை சீனா பயன்படுத்தும் தொகை 73 ஆயிரத்து 180 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு முழுவதும், வெளிநாட்டு மூலதனத்தை சீனா பயன்படுத்திய தொகை சுமார் 78 ஆயிரத்து 500 கோடி யுவானாகும் என்பது மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 25 ஆண்டுகளாக, வளரும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனா வகித்து வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் துறைக்கான வழிகாட்டுப் பட்டியல் மற்றும் தொடர்புடைய சட்டம், விதி, அமைப்புமுறை ஆகியவற்றையும் சீனா வகுக்கும். வெளிநாட்டுத் திறப்புப் பணியைச் சீனா மேலும் ஆழமாக்கும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கான வழிக்காட்டல், வெளிநாட்டுத் திறப்புக் அளவை விரிவாக்கி நியாயமான போட்டிச் சூழலை உருவாக்குதல், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதை மேலும் வலுப்படுத்துவது ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த 20 நடவடிக்கைகள் இவ்வறிக்கையில் இடம்பெறுகின்றன. அதேவேளை, வெளிநாட்டு முதலீட்டுக்கான நுழைவு வரையறைகளைத் தளர்த்தி, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை சீனா வலுப்படுத்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் நிங் ஜி ஷெ தெரிவித்தார்.
சேவை துறையில், எடுத்துக்காட்டாக, வங்கி, பங்குபத்திரம், எதிர்கால கொள்வனவு, காப்புறுதி போன்றவற்றின் வரையறையைத் தளர்த்த வேண்டும். மேலும், கணக்கர், தணிக்கை, கட்டிட வடிவமைப்புத் துறைகள், வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய துறைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.