• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் வழங்கிய 2017 புத்தாண்டுரை
  2016-12-31 19:08:06  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டை வரவேற்க, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் சீன வானொலி நிலையம், சீன மத்திய மக்கள் வானொலி நிலையம், மத்திய தொலைகாட்சி நிலையம் சீன உலக தொலைகாட்சி நிலையம் மற்றும் இணையம் மூலம் வாழ்த்துரையை வழங்கினார்.

அனைவருக்கும் வணக்கம்.

புதிய ஆண்டை வரவேற்கும் போது, சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களுக்கும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச மக்களுக்கும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச மக்களுக்கும், தைவான் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்களுக்கும், அனைத்துலக மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

2016ஆம் ஆண்டு, சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாகும். வளர்ச்சிக்கான புதிய கருத்தைச் செயலாக்க முறையில் பிடித்து, வசதி படைத்த சமூகத்தை முழுமையாகக் கட்டியமைப்பதை விரைவுப்படுத்தியதால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து உலகின் முன்னணியில் நிற்கின்றது. சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கி, விநியோகத் துறை சீர்திருத்தத்தில் முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். அதேவேளையில், தேசிய பாதுகாப்புத் துறை மற்றும் படைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்திலும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சீர்திருத்த அமைப்புமுறை அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி நாட்டை ஆளுவது, சட்டத் துறையில் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, சட்டநீதி நியாயத்தைப் பேணிக்காப்பது ஆகியவற்றில் முயன்று வருகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்குகளை ஆக்கப்பூர்வமாகவும் கண்டிப்பான முறையிலும் சரிப்படுத்தி, அரசியல் துறையில் ஊழலற்ற சூழ்நிலையை உருவாக்க முயன்று வருகின்றோம். 2016ஆம் ஆண்டு, விண்வெளிப்பயணத் துறையிலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல துறைகளிலும் சீனா அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. மேலும், சீர்திருத்தம் மூலம், கிராமப்புறத்திலிருந்து நகரங்களுக்குக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை வசதி, வறிய பிரதேசங்களிலுள்ள குழந்தைகளின் கல்வி வசதி முதலியவையும் தெளிவாக சீராக மாறி வருகிறன. பல மக்களுக்குச் சொந்த குடும்ப மருத்துவர் வசதி கிடைக்க துவங்கினர். முக்கிய ஆறுகளின் மேலாண்மைக்காக அதிகாரிப் பொறுப்பு அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மகிழ்ச்சி தரும் முன்னேற்றங்களாகும்.

ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் 11ஆவது உச்சிமாநாட்டில், சீனாவின் திறமையை வெளிப்படுத்தும் முன்மொழிவுகளும், சீனாவின் அழகான இயற்கை காட்சிகளும் உலக மக்களுக்குக் காண்பிக்கப்பட்டன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது. அமைதி இலக்கிற்கான வளர்ச்சியில் சீனா ஊன்றி நின்று, நாட்டின் உரிமை பிரதேசம் மற்றும் கடல் பரப்பின் நலன்களையும் உரிமையையும் உறுதியாகப் பேணிக்காக்கின்றோம். இந்தப் பிரச்சினையில் சீன மக்கள் எதையுமே விட்டுக்கொடுக்க மாட்டர்.

2016ஆம் ஆண்டில், பல இயற்கை சீற்றங்களும் துயரமான விபத்துகளும் நிகழ்ந்தன. இதைக் கண்டு மிகவும் மனவருத்தத்துடன் உள்ளோம். உலக அமைதிக்காக சீன அமைதிகாப்புப்படையைச் சேர்ந்த சில வீரர்கள் உயிர் இழந்தனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அதேவேளையில் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கின்றோம். 2016ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது 95ஆவது ஆண்டு நிறைவையும், சீனத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் செம்படையின் நீண்டப் பயணம் மாபெரும் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்து கொண்டாடினோம். சீன மக்கள் மற்றும் சீன தேசத்துக்கு பங்காற்றிய முன்னோடிகளை மனதில் கொண்டு, மனவுறுதியுடன் முன்னேறி வருகின்றோம்.

நண்பர்களே, வரும் 2017ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறும். அயரா முயற்சியுடனே வெற்றி பெற முடியும் என்பதை நம்புகின்றோம்.

கடந்த ஓராண்டில் சுமார் ஒரு கோடி வறிய மக்கள் வறுமையிலிருந்து விலகினர். வறுமை ஒழிப்பதில் முயற்சி மேற்கொள்ளும் அடிநிலை பணியாளர்களுக்கு மதிப்பு அளிக்கின்றேன். புதிய ஆண்டை வரவேற்கும் இந்தத் தருணத்தில் வறிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்றேன். இன்பமான புத்தாண்டு மற்றும் வசந்த விழாவை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்வி, மருத்துவ சிகிச்சை, வசிப்பிட வசதி முதலிய துறைகளில் இன்னும் பலர் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் கடமைகளாகும். வறிய மக்கள் மற்றும் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிய மக்களின் மீது அரசு மேலதிக கவனம் செலுத்தி, சீர்திருத்த மற்றும் வளர்ச்சியின் கனிகளை மேலதிக மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொள்வோம்.

130 கோடி மக்களுடன் சேர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை மேலும் சிறப்பாக கட்டியமைப்பது உறுதி.

நண்பர்களே, அனைத்துலகமும் ஒரே குடும்பம் என்பதில் சீன மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உலக மக்களுடன் சேர்ந்து வளர்ச்சி பெற விரும்புகின்றோம். தற்போது, சில நாடுகள் அல்லது பிரதேசங்கள், போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு மேற்கொண்டு, மனித குலத்தின் பொது நலன்களைக் கருத்தில் கொண்டு உலகை மேலும் செழுமையாகவும் அமைதியாகவும் கட்டியமைக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். முழு நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புடன் புதிய ஆண்டின் மணியோசையை சேர்ந்து வரவேற்போம்.

நன்றி. வணக்கம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040