• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி இயக்குநர் வாங் கேங்நியன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துரை
  2017-01-01 15:34:02  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு முன்னிட்டு, சீன வானொலி இயக்குநர் வாங் கேங்நியன், சீன வானொலி நிலையத்தின் பணியாளர்கள் அனைவரின் சார்பிலும் வானொலி மற்றும் இணையம் மூலம் வெளிநாடுகளின் ரசிகர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அன்பான நண்பர்களே, கடந்த ஆண்டிற்கு பிரியா விடை சொல்லி புத்தாண்டை வரவேற்கும் அருமையான தருணத்தில், அனைவருக்கும் அன்பான வணக்கத்தையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

சீன வானொலி நிலையத்தின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. வெளிநாட்டு நேயர்களும், இணைய பயன்பாட்டாளர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய நண்பர் எஸ். எம். ரவிச்சந்திரன் தனது சமூக ஊடக கணக்கில், "சிற்றலை வானொலி, இணையம், சமூக ஊடகம், கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் சீன வானொலி என்னுடன் இணைந்துள்ளது. நீங்கள் செவ்வனே வளர வேண்டும் என விரும்புகின்றேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என எழுதியிருந்தார். அன்பான நண்பர்களே, உங்கள் ஊக்கம் மற்றும் கவனத்திலிருந்து தான், நமது முன்னேற்றத்துக்கு வற்றாத இயக்காற்றல் கிடைத்துள்ளது. சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சிக்கு, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் ஆதரவு இன்றியமையாதது. உங்களுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

2016ஆம் ஆண்டு முக்கியமான சாலை சந்திப்பை உலகம் எட்டியுள்ளது. சீனா தனது பங்கினை வெளிக்கொணர்ந்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் சீனா உலக மேலாண்மை துறைக்கு சீன அறிவை வழங்கியது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பொறுப்புடைய வல்லரசின் தோற்றத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் சீனா உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சீனா பற்றி உலகம் அறிந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஓராண்டில், சீன வானொலி ஊடக ஒன்றிணைப்பு மற்றும் மாற்றத்தை ஆழமாக்கி, வெளிநாட்டு ஊடகங்களுடனான ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தியுள்ளோம். ரஷியா, செர்பியா, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் ஊடகங்களுடன் சீன வானொலி நிலையம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அடுத்தடுத்து இந்த மூன்று நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். கனவு பற்றி விளக்கிக் கூற மறக்கவில்லை. ஜி20 அமைப்பின் ஹாங்சோ உச்சி மாநாடு, தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகம் மற்றும் ஷேன்சோ-11 மனிதர் ஏற்றிச்செல்லும் விண்கலனின் விண்வெளிப் பயணம் உள்ளிட்டவை தொடர்பான சீன வானொலியின் செய்திகள் அதிக கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றன. சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையேயான தொடர்பை அதிகரிக்க பாடுபட்டு வருகின்றோம். புதிய ஊடக சின்னங்களை உருவாக்குவதுடன், சீனா-ஆங்கிலம், சீனா-இந்தியா உள்ளிட்ட பல மொழிகளிலான கைபேசி மென்பொருட்களை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

உழுவதற்குப் பின்தான் அறுவடை கிடைக்கும். 2016ஆம் ஆண்டு சீன வானொலி பல சாதனைகளைப் பெற்றுள்ளது. ரசிகர்களுடன் பரிமாற்றங்கள், 5 கோடியே 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நமது ரசிகர்களின் மன்றங்கள் 4115 ஆகும். பயன்பாட்டாளரின் மொத்த எண்ணிக்கை 26 கோடியாகும். நமது சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த பெருவாரியான எண்ணிக்கையில் நீங்கள் ஒருவராக மட்டுமல்ல, எங்கள் நண்பராகவும் திகழ்கிறீர்கள்.

75 ஆண்டுகள் வரலாறுடைய சீன வானொலி நிலையத்தைப் பொறுத்தவரை, புத்தாண்டு, புதிய துவக்கப்புள்ளியாகும். சீனா பற்றி மேலும் அறிந்து கொண்டு புரிந்து கொள்ளும் வகையிலும், சீனாவை மேலும் விரும்பும் வகையிலும், நாங்கள் முன்னெப்போதும் போல் பாடுபட்டு, தகவல் பரப்பு திறன் மற்றும் சேவை தரத்தை உயர்த்துவோம். நன்றி என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040