• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விநியோகத் துறை சீர்திருத்தம் பெற்ற முன்னேற்றம்
  2017-01-02 15:48:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளிவிபர பணித்தின் சேவைத் துறை ஆய்வு மையமும் சீன தளவாடம் மற்றும் கொள்வனவு சம்மேளனமும் புத்தாண்டின் முதல் நாளில் சீனாவின் புதிய கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண்ணை வெளியிட்டன.
அதன்படி, 2016ஆம் ஆண்டு டிசம்பரில், சீனாவின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் 51.4 விழுக்காடாகும். நவம்பர் திங்களில் இருந்ததை விட இது 0.3 விழுக்காடு குறைவாகும். இருப்பினும் இந்த குறியீட்டு எண் தொடர்ந்து 5 திங்களாக 50 விழுக்காடு என்ற அளவுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டின் இறுதியில் உற்பத்தியின் அளவும், தேவையின் அளவும் அதிகரித்தன. குறுகிய காலத்தில் பொருளாதாரம் நிதானமாக இயங்கும் என்று சீனச் சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் ஆய்வாளர் வாங் சூன் கூறினார்.
புதிய உயர் தொழில் நுட்பம் வாய்ந்த தயாரிப்புத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் உயர் நிலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து உயரும் போக்கும் தோன்றியுள்ளது. வெளிப்புறத் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தை மீட்கப்பட்டு வருவதை இது காட்டுகிறது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் மேலும் அதிக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. தற்போது காற்றின் தரம் கடும் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆகவே, அதிக எரியாற்றலைப் பயன்படுத்தும் சில தொழில்களின் உற்பத்தி தெளிவாக குறைந்து வருகிறது. இது நல்லது என்று அவர் கூறினார்.
உற்பத்தியைத் தவிர்த்த துறைகளில், கடந்த டிசம்பர் திங்களில் இருப்புப்பாதை போக்குவரத்து, விமான போக்குவரத்து, அஞ்சல், தொலை தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி, செயற்கைக் கோள் சமிக்கை சேவை, இணையம் மற்றும் மென்பொருள் தகவல் தொழில் நுட்பச் சேவை, நாணய மற்றும் நிதி சேவை, காப்புறுதி, வாடகை மற்றும் வணிகச் சேவை முதலிய வணிகச் செயல்பாடுகளின் குறியீட்டு எண்கள் 55 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நிலையில் உள்ளன. அவற்றின் மொத்த அலுவல் அளவு விரைவாக அதிகரித்து வருகின்றது. மேலும் வீட்டு நிலச் சொத்து சந்தையில் அரசு மேற்கொள்ளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவால், இத்துறையிலான வணிகச் செயல்பாடுகள் குறைய தொடங்கியுள்ளன.
2016ஆம் ஆண்டு சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாகும். மத்திய அரசின் தலைமையில் நடத்தப்பட்ட விநியோக துறை சீர்திருத்த நடவடிக்கைகளில், அளவுக்கு மீறிய உற்பத்தியாற்றலைக் குறைப்பது முதலிடத்தில் வைக்கப்பட்டது. வாங் ஜுன் மேலும் கூறியதாவது
இரும்புருக்கு, நிலக்கரி ஆகியவற்றைத் தவிர, சிமெண்ட், மின்பகுபொருள் அலுமினியம், தட்டையான கண்ணாடி, கப்பல் முதலியவை உள்ளிட்ட துறைகளின் உற்பத்தியை சரியான அளவில் குறைப்பது இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணியாகும். விநியோகம் மற்றும் உற்பத்தி அளவைச் சரிப்படுத்துவது, தயாரிப்புத் துறையில் கொள்வனவு மேலாளர்களின் நம்பிக்கையையும் சந்தையின் செயலாக்கத்தையும் உயர்த்துவதற்குத் துணை புரியும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040