• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எரியாற்றல் துறை வளர்ச்சிக்கான 13ஆவது ஐந்தாண்டு திட்டம்
  2017-01-05 17:58:15  cri எழுத்தின் அளவு:  A A A   
எரியாற்றல் துறை வளர்ச்சிக்கான 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தை சீனா அண்மையில் வெளியிட்டது. அதன்படி, சீனாவில் படிம அல்லாத எரியாற்றலின் நுகர்வு அளவு மொத்த எரியாற்றல் நுகர்வு அளவில் வகிக்கும் வகிதம் 15 விழுக்காட்டக்கு மேல் அதிகரிக்கப்படும். இயற்கை வாயுவின் நுகர்வு விகிதாச்சாரம் 10 விழுக்காடாக உயர்த்தப்படும். அதேவேளையில், நிலக்கரி நுகர்வின் அளவு 58 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவில் எரியாற்றல் துறை வளர்ச்சிக்கான பொது செயல் திட்டம் இதுவாகும். திட்டப்படி, 2020ஆம் ஆண்டுக்குள் சீனாவில் மொத்த எரியாற்றல் பயன்பாடு 500 கோடி டன் நிலக்கரி நுகர்வு அளவுக்கும் கீழ் கட்டுப்படுத்தப்படும். 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் போது எரியாற்றல் நுகர்வி அளவு ஆண்டுக்கு சராசரியாக 2.5 விழுக்காடு அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு வேகம் கடந்த 5 ஆண்டு காலத்தில் இருந்ததை விட 1.1 விழுக்காடு குறைவு.

அண்மையில் வடக்கு சீனாவிலுள்ள பெரும் பிரதேசங்களில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. இத்தகைய மோசமான காலநிலை சீனாவின் எரியாற்றல் நுகர்வு அமைப்புமுறையுடன் நேரடி தொடர்புடையது. இது குறித்து, சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் துணைத் தலைவர் லீ யாங்ட்சே கூறியதாவது

எரியாற்றல் அமைப்புமுறையைச் சீராக்கி, கரி குறைந்த வளர்ச்சியை நனவாக்குவது, எரியாற்றல் துறை சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை தேவையாகும். சீனாவில் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைச் சீராக்குவதற்கான அவசர தேவையும் இதுவாகும். 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, கரி குறைந்த எரியாற்றல் சீன எரியாற்றல் நுகர்வின் முக்கிய பகுதியாக மாறும் என்று அவர் கூறினார்.

இவ்விலக்கை நனவாக்கும் வகையில், படிம அல்லாத எரியாற்றல் துறையை சீனா பெரிதும் வளர்க்கும். நீர் மின்சாரம், அணு மின்சாரம் உள்ளிட்ட பல பெரிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், காற்றாற்றல் மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும். அத்துடன், இயற்கை வாயுவின் நுகர்வு சந்தையும் விரிவாக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு கூடிய அளவில் மாசுபாட்டற்ற முறையில் நிலக்கரியின் பயன்பாட்டு பயனை அதிகரிக்கவும் சீனா பாடுபடும்.

எரியாற்றல் மூலவளங்களின் பரவல் காரணத்தால், சீனாவில் எரியாற்றல் தளங்களில் பெரும்பாலானவை வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. மேற்கிலிருந்து கிழக்கு பகுதிக்கு மின்சாரத்தையும், இயற்கை வாயுவையும் அனுப்புவது, வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு நிலக்கரியை அனுப்புவது ஆகியவை சார்ந்த எரியாற்றல் அமைப்புமுறை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய திட்டப்படி, இந்த அமைப்புமுறை சீராக்கப்படும்.

கிழக்கு மற்றும் நடு பகுதிகளில் புதிய காற்றாற்றல் மற்றும் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்படும். இது மட்டுமல்லாமல், நிலக்கரி மின்னாற்றலின் அளவு கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணியின் கட்டுமானத்துடன், உலக எரியாற்றல் மேலாண்மையில் சீனா செயலாக்க முறையில் கலந்து கொள்ளும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040