புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சிக்கான 13வது ஐந்தாண்டு திட்டத்தை சீனா அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் புதிய முதலீட்டுத் தொகையாக 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவான் அதிகரிக்கப்படும். அத்துடன், அமைப்புமுறையின் தடைகளை நீக்கி, நீர், காற்று, சூரியன் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் எரியாற்றல் பயன்பாட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். புதுப்பிக்கவல்ல வளர்ச்சியின் பொருளாதாரத் தன்மை மற்றும் போட்டியாற்றலை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று சீனத் தேசிய எரியாற்றல் அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதுப்பிக்கவல்ல எரியாற்றல் என்பதால், நீர், காற்று, சூரியன் மற்றும் உயிர் வள எரியாற்றல், புவி வெப்ப ஆற்றல், கடல் ஆற்றல் போன்றவை. 13வது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் போது, புதுப்பிக்கவல்ல எரியாற்றல், சீனாவின் எரியாற்றல் மற்றும் மின்னாற்றலின் அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக மாறும் என்று சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் துணைத் தலைவர் லீ யாங் ஷெ தெரிவித்தார். அவர் கூறியதாவது
13வது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் போது, சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றலின் ஆண்டு அதிகரிப்பு 4கோடியே 25 இலட்சம் கிலோவாட் ஆகும். 2020ஆம் ஆண்டுக்குள், வணிகப் பொருட்கள் மயமான புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் ஆண்டு பயன்பாட்டு அளவு 58 கோடி டன் நிலக்கரிக்குச் சமம். மேலும், அணு மின்னாற்றல் இதில் சேர்க்கப்படும். இதன்விளைவாக, 2020ஆம் ஆண்டின் போது, புதை படிவமற்ற எரியாற்றல் விகிதம் 15 விழுக்காட்டை எட்டும் என்ற இலக்கு அடிப்படையில் நிறைவேற்ற முடியும். 2030ஆம் ஆண்டில், இவ்விகிதம் 20 விழுக்காட்டை எட்டுவதற்கு இது வலிமையான அடிப்படையாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில், சீனாவின் புதுப்பிகவல்ல எரியாற்றலுக்கான முதலீட்டுத் தொகை, 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும். இந்த எரியாற்றலின் வளர்ச்சியினால் கிடைக்கும் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலன்கள் தொடர்ந்து வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.
அப்பொழுது, சீனாவில் கரியமில வாயு வெளியேற்ற அளவு ஆண்டுக்கு 140 கோடி டன்னாக குறைக்கப்படும். கந்தக வாயு வெளியேற்ற அளவு ஒரு கோடி டன்னாக குறைக்கப்படும். சுமார் ஒரு கோடியே 30 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்.