அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 15-ஆம் நாள் அமெரிக்காவின் உயிரணு எனும் இதழில் வெளியிட்ட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளனர்.
வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி மனிதரின் தோற்றம் தொடர்பான மரபணுமாறுப்பாட்டை மாற்றுவது என்பது, மனிதரின் இளமையை மீண்டும் பெறுவதற்கான விருப்பமிக்க வழிமுறையாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனிதர்கள் முதுமையை அடைவதென்பது, சிக்கலான போக்கு ஆகும். இது, தொடர்பான சிகிச்சை வழிமுறை, 10க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின் மருத்துவ மனையில் சோதனை செய்யப்படக் கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.