• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் அறிவுசார் நகரங்களின் வளர்ச்சி
  2017-01-09 09:58:23  cri எழுத்தின் அளவு:  A A A   

3 நாட்கள் நீடிக்கும் 6வது உலக துடிப்பான நகர மாநாடு நவம்பர் 15-ஆம் நாள் ஸ்பெயினின் வட கிழக்குப் பகுதியிலுள்ள பார்செலோனா நகரில் துவங்கியது. உலகில் துடிப்பான நகரத்தின் கட்டுமானம் என்பது, விரைவான வளர்ச்சி போக்கில் நுழைந்துள்ளது. தகவல் செய்தித் தொடர்புத் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் மூலம், எல்லாவற்றையும் கண்டுணர்ந்து கொள்வது, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைவது, எல்லாவற்றிலும் புத்திசாலித்தனத்தை கொள்வது ஆகிய கருத்துகள் இந்நகரில் நனவாக்கப்படக் கூடும்.

அறிவுசார் நகரம் மற்றும் அறிவுசார் நகரவாசிகள் என்பது, நடப்பு மாநாட்டின் தலைப்பாகும். உலகில் 600 நகரங்களிலிருந்து வந்த பிரதிநிதிகள் குழுக்கள், செய்தி தொடர்பு தொழில் நுட்ப துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள், இம்மாநாட்டில் பங்கெடுத்துள்ளன.

இம்மாநாட்டில் வெளியிட்ட ஆய்வு தரவுகளின்படி, 2016-ஆம் ஆண்டு இறுதி வரை, உலகில் அறிவுசார் நகரச் சந்தை அளவு, 4ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டும். அறிவுசார் நகரங்கள், மக்களின் வாழ்க்கை மற்றும் வேலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றி வருகின்றது. 2017ஆம் ஆண்டுக்குள், குறைந்தது 20 நாடுகள், அறிவுசார் நகரம் பற்றிய கொள்கையை வகுக்கும்.

சீனா கௌரவ விருந்தினராக நடப்பு மாநாட்டில் பங்கெடுத்தது. சீனாவின் ஹுவா வெய் தொழில் நிறுவனம், அதன் ஒத்த்துழைப்பு நிறுவனங்களுடன் இணைந்து, மேகக் கணினி, பெரிய தரவுகள், சரக்கு இணையம் ஆகிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நகரில் உருவாக்கப்படும் புத்திசாலித்தன செயல் மையம், நகரின் அடிப்படை வசதிகள் நிர்வாகம் மற்றும் பொது சேவைக்கான தீர்வுத் திட்டம் முதலியவை நடப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், இத்துறையில் சீனா பெற்றுள்ள அனுபவங்கள் இதர நாடுகளுடன் கூட்டாக பகிர்ந்து கொள்ளப்பட்டன.

சீனாவின் நகர சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி மைய செயற்குழுத் தலைவர் லீ தெய் கூறுகையில், துடிப்பான நகரம் என்பது, நகர மயமாக்கம், உயர் அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைந்து வளரும் இன்றியமையாத விளைவாகும் என்று கருத்து தெரிவித்தார். நாடுகள் மற்றும் வேறுபட்ட துறைகளைக் கடந்து ஒத்துழைப்பு மேற்கொண்டதால் தான், அறிவுசார் நகரத்தை உருவாக்கும் மாபெரும் இலக்கை வெற்றிகரமாக நனவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹுவா வெய் தொழில் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் Ma மா யூயூ பேசுகையில், சூப்பர் அகன்ற அலைவரிசை இணையம், மேகக் கணிமை, பெரிய தரவுகள், சரக்கு இணையம் முதலிய தொழில் நுட்பங்கள், துடிப்பான நகரத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார். இதுவரை, அறிவுசார் நகரம் பற்றி ஹுவா வெய் தொழில் நிறுவனத்தின் தீர்வு திட்டங்கள், உலகில் 40க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் மா யூயூ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040