2017ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கழிவறை புரட்சி எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இப்பிரதேசத்தின் தலைவர் லொசாங்ஜியாசுன் 10ஆம் நாள் தலைநகர் லாசாவில் தெரிவித்தார்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 10ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத்தில் அரசு பணியறிக்கையை வழங்கிய போது அவர் இதைத் தெரிவித்தார்.
கழிவறை புரட்சி, சுற்றுலாத் துறையினால் முன்வைக்கப்பட்டது. காட்சித் தளங்களிலிருந்து தொடங்கி நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாக கவனத்தை ஈர்க்கும் கழிவறையின் கட்டுமானத்துக்கான சீரமைப்பு நடவடிக்கை இதுவாகும்.
மேலும், பொது மக்களின் உடல் நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், இவ்வாண்டில் 2000 கழிவறைகளின் சீரமைப்புப் பணி நிறைவேற்றப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 
  அனுப்புதல்
 அனுப்புதல்