பெய்தொவ் வழிகாட்டி செயற்கைக்கோள் தொகுதி
2017-01-11 11:01:44 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் பெய்தொவ் வழிகாட்டி செயற்கைக்கோள் தொகுதி நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டுமானத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுக்கும், 2020ஆம் ஆண்டில் முழு உலகிற்கும் இதனால் சேவை புரிய முடியும்.
தற்போது பெய்தொவ் தொகுதி சீராக இயங்குவதாகவும், ஒரு கோடிக்கு மேற்பட்ட பொது மக்கள் அல்லது நிறுவனங்களுக்கு இது வழிகாட்டி சேவை வழங்குவதாகவும் சீன செயற்கைக் கோள் வழிகாட்டி மற்றும் புவியிடங்காட்டி அமைப்பு பயன்பாட்டு நிர்வாக மையத்தின் தலைவர் ஃபூ யுங் 10ஆம் நாள் நடைபெற்ற தொடர்புடைய ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய