ஜனவரி 15ஆம் நாள் முதல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஸ்விட்சர்லாந்தில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின்போது, டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் 2017ம் ஆண்டுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று உரை நிகழ்த்துவார். இப்பயணம், 2017ம் ஆண்டில் ஷி ச்சின்பிங்கின் முதலாவது பயணமாகும்.
இப்பயணம் தொடர்பாக இன்று 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் லீ பாவ்தொங் பேசுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பயணம் இவ்வாண்டில் சீன வெளியுறவுத் துறையில் நடைபெறும் முதல் நிகழ்வாகும் என்றும், அவர் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.
இப்பயணம், புதிய நூற்றாண்டில் சீன அரசுத் தலைவர் ஸ்விட்சர்லாந்தில் மேற்கொள்ள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணமாகும். 4 நாள் பயணத்தில், பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இரு தரப்புப் பயணம், உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம், பல சர்வதேச அமைப்புகளில் பயணம் ஆகியவை இவற்றுள் உள்ளடங்குகின்றன. பயணத்தின்போது, இரு நாட்டுத் தலைவர்கள் இரு நாட்டுறவின் வளர்ச்சி எதிர்காலத்துக்குரிய புதிய திட்டங்களை வகுப்பார்கள். அரசியல், வர்த்தகம், சுங்கம், எரியாற்றல், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு நாடுகள் கையெழுத்திடும். இது பற்றி லீ பாவ்தொங் பேசுகையில், இப்பயணம், சீன-ஸ்விட்சர்லாந்து உறவின் வளர்ச்சி முன்னேற்றத்தில் புதிய மைல் கல்லாக இருக்கும். சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு, உலகின் அமைதி, நிலைப்புத்தன்மை ஆகியற்றை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2017ம் ஆண்டு கூட்டம் 17ஆம் நாள் டாவோஸ் நகரில் துவங்கும். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூட்டத்தின் தலைப்பு குறித்த முக்கிய உரையை நிகழ்த்துவார். மேலும், இம்மன்றத்தைத் தொடக்கி வைப்பவரும் மன்றத்தின் தலைவருமான கிளவ்ஸ் ஷ்வாப், கூட்டத்தில் கலந்து கொள்ளும் முக்கிய விருந்தினர்கள் ஆகியரோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். சீன அரசுத் தலைவர் இந்த மன்றத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று லீ பாவ்தொங் குறிப்பிட்டார்.
மனம் திறந்த நிலையில் ஒத்துழைப்புடன் பல்வேறு தரப்புடன் இணைந்து, உலகின் முக்கிய அறைகூவல்களை சமாளிப்பது, உலகப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை தூண்டுவது ஆகிய அம்சங்கள் பற்றி விவாதிக்க சீனா விரும்புவதாகவும் லீ பாவ்தொங் கூறினார்.