டாவோஸ் மன்றமும் உலகப் பொருளாதார மேலாண்மையில் சீனாவின் பங்கும் என்ற தலைப்பில் சீனச் செய்தியாளர் சங்கம் 12ஆம் நாள் பிற்பகல் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் ஸ்வீட்சர்லாந்து பயணம் பற்றி சீனத் தற்கால பன்னாட்டுறவு ஆய்வு கழகத்தைச் சேர்ந்த உலக பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் சென் ஃபங்யிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
டாவோஸ், ஜெனீவா ஆகிய நகரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது, உலக மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, மனித குலத்தின் வளர்ச்சி முதலியவை பற்றி சீனாவின் கருத்துக்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வோம். தற்போது உலகப் பொருளாதாரம் தேக்க நிலையில் சிக்கியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சீரான ஒழுங்குமுறையையும் அமைப்புமுறையையும் கட்டியமைக்க வேண்டும்.
நடப்பு டாவோஸ் மன்றக் கூட்டம் ஆற்றல்களையும் கருத்துக்களையும் தொகுத்து, நடைமுறை நடவடிக்கைகள் மூலம் உலக வளர்ச்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். உலகப் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டுறவுகளில் சீனாவின் பங்கு கவனத்துக்குரியது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியில் கலந்து கொள்ளுமாறு ஐ.நா ஆவணங்கள் பல்வேறு நாடுகளைக் கேட்டுகொண்டுள்ளன. ஐரோப்பாவுக்கான சீனாவின் முதலீட்டுத் தொகை, சீனாவுக்கான ஐரோப்பாவின் முதலீட்டுத் தொகையைத் தாண்டியுள்ளது. இந்நிலைமையில், உலக மேலாண்மை, உலக ஒத்துழைப்பு, பன்னாட்டு ஒழுங்குமுறை முதலிய துறைகளில் சீனாவின் ஆலோசனைகள் தேவைப்படுகிறன.
உலக மயமாக்கம் தடுக்கப்பட முடியாத ஒரு போக்காகும். அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் புத்தாண்டில் மேற்கொள்ளும் தனது முதலாவது பயணத்தில், பொருளாதாரத்தின் உலக மயமாக்கம், உலக மேலாண்மை பிரச்சினைகள் ஆகியவை பற்றி சீனாவின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் விவரிப்பார். பொருளாதார உலக மயமாக்கம் மேலும் அதிக மக்களுக்கு நன்மை பயக்கும் திசை நோக்கி வளர்வதை சீனா ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும்.