அமெரிக்காவின் தனியார் நிறுவனமான விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் தயாரித்த "ஃபெல்கன்-9(Falcon-9)"எனும் ராக்கெட் ஜனவரி 14-ஆம் நாள் வெற்றிகரமாக பத்து செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. இரிடியம் செயற்கை கோள் நிறுவனத்தைச் சேர்ந்த பத்து செயற்கை கோள்கள் தடையின்றி திட்டவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளன. மேலும், ஃபெல்கன்-9 ராக்கெட்டின் முதல் நிலை பகுதி பசிபிக் பெருங் கடலிலுள்ள ஆளில்லா கப்பல் ஒன்றில் மெதுவாகத் தரையிறங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும் என்று தெரிய வந்துள்ளது.