• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம்
  2017-01-16 09:59:47  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 15ஆம் நாள் முதல் ஸ்விசர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 21ஆவது நூற்றாண்டில், சீன அரசுத் தலைவர் அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மேலும், சீனாவின் அதியுயர் தலைவர் உலகப் பொருளாதாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்விட்சர்லாந்தை அடைந்த ஷிச்சின்பிங் பேசுகையில், இப்பயணம், நட்புறவை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், அமைதி மற்றும் வளர்ச்சியை கூட்டாக ஆய்வு செய்வதற்கும் அமையும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

ஸ்விட்சர்லாந்துடன் இணைந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஊக்குவித்து, புதிய படைப்புக்கான இரு தரப்பு நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஊக்குவிப்பதை எதிர்பார்க்கின்றேன். டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம், சர்வதேச அமைப்புகள் ஆகிய வழிமுறைகளில், தற்போதைய சூழ்நிலையில், உலக அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்து, உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து பல்வேறு தரப்புகளுடன் ஆலோசிக்க உள்ளேனே. மேலும், சர்வதேச சமூகத்திடம் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை, கையெழுத்து நிகழ்ச்சி, செய்தியாளர் சந்திப்பு, ஸ்விட்சர்லாந்தின் பொருளாதாரத் துறையினரின் சந்திப்பு ஆகிய நிகழ்வுகளில் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் திங்கள்கிழமை அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளார். அரசியல், தடையற்ற வர்த்தகம், பண்பாடு, சுங்கம், எரியாற்றல், வளர்ச்சி ஒத்துழைப்பு, விளையாட்டு முதலான துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன. தவிரவும, 2017ஆம் ஆண்டு சீன-ஸ்விட்சர்லாந்து சுற்றுலா ஆண்டு என்ற நிகழ்ச்சியை இரு தரப்பும் தொடக்கி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் இரு நாட்டு மக்களும் நன்மையைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் பெர்னில் பயணத்தை நிறைவு செய்து பின உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க டாவோஸ் நகருக்குப் புறப்படுவார். 17ஆம் நாள் அதன் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த சீனாவின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பார். இது பற்றி சீன சர்வதேச விவகார ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவர் ருவன் சுங்சே கூறியதாவது

உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ள அதேசமயம், உலகமயமாக்கம் எதிர்ப்பு, வர்த்தக பாதுகாப்புவாதம் ஆகிய குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தாராளமயமாக்கத்தை பின்பிற்றுவது, வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பது, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது போன்ற சீனாவின் தீர்வுத் திட்டம், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துவதற்கு முக்கியமானது என்று தெரிவித்தார்.

ஸ்விட்சர்லாந்து பயணம், டாவோஸ் கூட்டத்தில் பங்கேற்பு ஆகியவற்றைத் தவிரவும், ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் பன்னாட்டு மாளிகையில் ஷி ச்சின்பிங் உரையாற்ற உள்ளார். அங்கு, தற்போதைய சர்வதேச ஒழுங்கு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பார். மேலும், சர்வதேச சுகாதார அமைப்பு, சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு ஆகியற்றிலும் அவர் பயணம் மேற்கொள்வார். சீன அதிபர் முதன்முறையாக இவ்விரு சர்வதேச அமைப்புகளுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040