சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டத்தில் 17ஆம் நாள் சிறப்புரையாற்றினார். முதல்முறையாக இக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார உலகமயமாக்கத்தை உறுதியுடன் முன்னெடுத்து, உயிராற்றல் வாய்ந்த அதிகரிப்பு முறை, திறப்பு மற்றும் கூட்டு பெற்றி பெறும் ஒத்துழைப்பு முறை, நேர்மையான மற்றும் நியாயமான ஆட்சிமுறை, சமத்துவமான வளர்ச்சி முறை ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தனது உரையில் வலியுறுத்தினார்.
சர்வதேச சமூகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் பொருளாதார உலகமயமாக்கப் பிரச்சினை குறித்து ஷிச்சின்பிங் தனது உரையில் முதலில் கருத்து தெரிவித்தார். உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் காலத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அழுத்தம் மற்றும் பல்வேறு தாக்கதங்களை உணர்ந்துள்ளன. ஆனால், பொருளாதார உலகமயமாக்கம், உலகின் பிரச்சினைகளின் காரணம் என எளிமையாக கருதுவது, உண்மைக்கு புறம்பானதாகவும், பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ முடியாததாகவும் அமையும். ஒத்துழைப்புடன் அறைகூவல்களை சமாளிப்பது சரியான தேர்வு. வேறுபட்ட நாடுகளுக்கும் வேறுபட்ட நிலையிலுள்ள மக்களுக்கும் பொருளாதார உலகமயமாக்கத்தின் நன்மை கிடைக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதாரம் இன்னல்களிலிருந்து மீட்கும் முயற்சி, தற்போதைய மிக அவசர பணியாகும். உலக அதிகரிப்புக்கு உந்து சக்தி பற்றாக்குறை, உலக பொருளாதார நிர்வாகத்தின் பின்தங்கிய நிலை, உலக வளர்ச்சியின் சமமின்மை ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதற்காக, புத்தாக்கம் செய்வதில் தீர்வு காண்பது, ஒருங்கிணைப்புடன் கூட்டாக நடவடிக்கை மேற்கொள்வது, திறப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறுவது என ஒத்துழைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
சீனாவின் வளர்ச்சிப் பாதையை தனது உரையில் மீண்டும் அவர் தெளிவுபடுத்தினார். சீனாவின் வளர்ச்சி, உலகிற்கு வாய்ப்பு ஆகும். பொருளாதார உலகமயமாக்கத்தின் பயன் பெறும் நாடாகவும், பங்களிப்பை அளிக்கும் நாடாகவும் சீனா திகழ்கிறது. பல்வேறு நாடுகளின் மக்கள், சீன வளர்ச்சியுடன் இணைந்து முன்னேறி வருவதை சீன மக்கள் வரவேற்கின்றனர் என்று அவர் கூறினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்குள்ளான சர்வதேச ஒத்துழைப்புக்கான மன்றக் கூட்டம் இவ்வாண்டு மே திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறும். அதன் மூலம், தற்போது உலக மற்றும் பிரதேசப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தால் பல்வேறு நாடுகளின் மக்கள் நன்மை பெற வேண்டும் என்று ஷிச்சின்பிங் அறிவித்தார்.
உலக பொருளாதார மன்றத் தலைவர் களௌஸ் ஸ்வாப் பேசுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு மற்றும் அவரது உரை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது, உலகிற்கு முக்கிய தகவலை அளித்துள்ளதுடன் நேர்மையான ஆற்றலையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.