இது குறித்து, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை தலைவரும், சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகத் தலைவருமான நிங் ஜி சே கூறியதாவது:
"2016ஆம் ஆண்டு சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலை எதிர்நோக்கி, அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கை மையமாகக் கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், நிதானமாக முன்னேறும் பணியிலும், புதிய வளர்ச்சி என்ற கருத்திலும் சீனா ஊன்றி நின்று, விநியோக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதை முக்கிய நெறியாகக் கொண்டு, பொது தேவையை உரிய அளவில் விரிவாக்கி, சீர்திருத்தம் மேற்கொண்டு, அபாயத்தை உரிய முறையில் சமாளித்தது. தேசியப் பொருளாதார செயல்பாடு நிதானமாகி, 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்துக்கு சிறந்த துவக்கம் வந்துள்ளது" என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளில், நாணயம், பொருளாதாரத்துக்கு சேவை புரியும் அளவை சீனா அதிகரித்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக வினியோக முறைச் சீர்திருத்தம் மூலம், தொழில் நிறுவனங்களின் பயன் மேம்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை மேம்பட்டு வருகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று நிங் ஜி சே தெரிவித்தார். அடுத்த காலக் கட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:
"சந்தையில் காணப்படும் அளவுக்கு மீறிய ஏற்றத்தாழ்வினால் ஏற்படக்கூடிய அபாயத்தைத் தொடர்ந்து தடுக்க வேண்டும். கட்டமைப்பைச் சீ்ர்படுத்தி, சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவதன் மூலம், சேவைத் துறை, தொழிற்துறை, வேளாண் துறை ஆகியவற்றுக்கிடையேயான நெருக்கமான இணைப்பை விரைவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட வேண்டும்" என்றார் அவர்.
தவிர, 2016ஆம் ஆண்டு, ரென்மின்பி கடன் தொகை, 12 லட்சத்து 65 ஆயிரம் கோடி யுவான் அதிகரித்தது. இது 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட 92 ஆயிரத்து 570 கோடி யுவான் அதிகரித்துள்ளது.