சீனத் தேசிய வனத் தொழில் பணியகம் ஜனவரி திங்கள் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனாவில் பாலைவனமயமாக்கத் தடுப்புப் பணி, பாலைவனமயமாக்கத் தடுப்புக்கான ஐ.நாவின் பொது உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தரப்புகளின் 13ஆம் முறை கூட்டம் தொடர்பான தகவல்கள் இதில் வெளியிடப்பட்டன. சீனாவின் தேசியளவில் பாலைவனமயமாக்க விரிவாக்க வளர்ச்சி முன்னேற்றப் போக்கு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் பாலைவனமாகுதல் மற்றும் மணல் நிலமாகுதல் தொடர்ந்து தணிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய வனத் தொழில் பணியகம் தெரிவித்துள்ளது.
பாலைவனமயமாக்கம், பூமியின் புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது. இது, உலகளவில் இயற்கைச் சூழலுக்கான கடினமான பிரச்சினையாக விளங்குகிறது. உலகளவிலான பாலைவனமயமாகுதல் மற்றும் மணல் நிலமாகுதல் பிரச்சினையால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. மணற்காற்றைத் தடுக்கும் பணியில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருகிறது. இனிமேல், இப்பணி நிறுத்தப்படப்போவதில்லை.
இயற்கை காட்டுப் பாதுகாப்பு, வட சீனாவின் மூன்று மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பாதுகாப்பு வனப் பகுதிகள் போன்ற திட்டப்பணிகள், முக்கிய பிரதேசங்கள் மற்றும் அவை தொடர்பான பலவீனமான தொடர்களை சீனா முக்கியமாக நிர்வகித்து வருகிறது. தேசியளவில் பாலைவனமயமாக்க நிலைமை பொதுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலைவனமயமாக்க அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று சீனத் தேசிய வனத் தொழில் பணியகத்தின் துணைத் தலைவர் சாங் யொங் லி தெரிவித்தார். அவர் கூறியதாவது
ஒலி 1
தொடர்புடைய கண்காணிப்பு முடிவுகளின்படி, 2014ஆம் ஆண்டு தேசியளவில் பாலைவனமயமாக்குதல் மற்றும் மணல் நிலமாகுதல் பரப்பளவு, 2009ஆம் ஆண்டின் இருந்ததை விட முறையே 12ஆயிரத்து 120 சதுர கிலோமீட்டராகவும் 9 ஆயிரத்து 902 கிலோமீட்டராகவும் குறைந்துள்ளது. மணற்பாங்கான நிலங்களில் தாவரங்கள் மற்றும் காலநிலை நிலைமை தொடர்ந்து சீராக மாறி வருகின்றது. காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பு 0.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்டின் சாரசரியான புழுதிக் காற்று வீசும் வானிலை தொடர்புடைய கண்காணிப்பு தரவுகளின்படி, ஏறக்குறைய 20.3 விழுக்காட்டாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.