ச்சுங் லீ பிரதேசத்தில் உள்ள சாங் ஜியா கோ போட்டி பகுதி, வட சீனாவில் மிகவும் தலைசிறந்த இயற்கை பனிச்சறுக்கல் பகுதி என போற்றப்படுகின்றது. பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் பனிப்போட்டிகளை நடத்தும் முக்கியத் திடல்களும் அரங்குகளும் இங்கே நிறுவப்படும். சாங் ஜியா கோ விளையாட்டுப் போட்டிப் பகுதியில் உள்ள தற்காலிக அரங்கைப் பார்வையிட்ட போது, இப்போட்டி பகுதியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வகை ஆயத்தப் பணிகள் திட்டப்படி ஒழுங்கு முறையில் முன்னேறி வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பசுமை, கூட்டுப் பகிர்வு, திறப்பு, நேர்மை ஆகியவை படைத்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்துவது தொடர்பான கோரிக்கையின்படி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து கட்டுமானத் திட்டப்பணிகளையும் முன்னேற்ற வேண்டும். போட்டிக்கான வசதிகளின் கட்டுமானத்தை சிறப்பு தொழிலுடன் மேற்கொள்ள வேண்டும். இசைவான வசதிகள், தங்களது தனிசிறப்பைக் கொண்டு, சீன பாணி மற்றும் உள்ளூர் தனிச்சிறப்பை வெளிப்படுத்த வேண்டும். எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையறையைக் கண்டி்பபான முறையில் செயல்படுத்தி, உயிரின வாழ்க்கை சூழலையும், தொல் பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும். நவீன கட்டடங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் வரலாற்றுப் பண்பாடுகளுடன் இணைந்து, மக்களுக்கு நன்மை பயக்கும் தரமிக்க சொத்தாகவும், நகரின் புதிய அடையாளமாகவும் மாற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வின் இன்பத்துக்கு உடல் பயிற்சி மிகவும் முக்கியமானது. சீனா 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள வல்லரசு ஆகும். விளையாட்டு, முக்கிய சமூக லட்சியமாகும். விளையாட்டு, ஒளிவீசும் எதிர்காலத்தைக் கொண்டுள்ளது. சீனாவின் பனிப் போட்டிகளின் விரைவான வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், சீனர்கள் அனைவரும் உடல் பயிற்சிகள் பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்படுவதை தூண்டுவதும், சீனா பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.