• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் இயற்கை குடிநீரின் உற்பத்தி அளவு
  2017-01-24 17:19:39  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் இயற்கை குடிநீரின் உற்பத்தி அளவு 10 லட்சம் டன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இப்பிரதேசத்தின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப வாரியம் அண்மையில் தெரிவித்தது.

ஆசிய நீர் கோபுரம் என போற்றப்படும் திபெத்தில் ஓராண்டுக்கான நீர் வளம் சராசரியாக 43 ஆயிரத்து 940 கோடி கன மீட்டராகும். கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை குடிநீர் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உள்ளூர் அரசு பெரும் முயற்சியுடன் ஆதரவளித்து வருகிறது. இதுவரை திபெத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயற்கை குடிநீர் உற்பத்திக்கான அனுமதியைப் பெற்றுள்ளன. அவற்றின் உற்பத்தித் திறன் 32 லட்சத்து 50 ஆயிரம் டன்னைத் தாண்டியுள்ளது.

திபெத்தின் தரமிக்க நீரின் பசுமை மற்றும் மாசற்ற தன்மையை உத்தரவாதம் செய்யும் வகையில், இயற்கை குடிநீர் மூலவளப் பாதுகாப்பு மற்றும் பரிசோதனையை திபெத் தொடர்ந்து வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040